More
Categories: Cinema News latest news

அதே மாவு…அதே தோசை…கோலமாவு கோகிலாவை திருப்பி போட்டா டாக்டர்!….

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக

தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் தற்போதுதான் ரிலீஸ் ஆகியுள்ளது. அதுவும் ஓடிடி ரிலீஸ் என வெளியான செய்திகளை உடைத்து இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

சில தியேட்டர்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இப்படத்தை ஆர்வமுடன் சென்று பார்த்தனர். இதில் பலரும் முதல் பாதி முடிந்த பின் சிலரும் முழு படத்தையும் பார்த்த சிலரும் படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பலரும், டாக்டர் முதல் பாதி சிறப்பாக இருந்ததாகவும், சிரிக்கும் படியான காட்சிகள் நிறைய இருந்ததாகவும், குறிப்பாக மெட்ரோ ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எனவும், அதே நேரம் நல்ல திரில்லிங்காக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளனர்.

இதுபோல் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு நடித்திருக்கவில்லை எனவும், டார்க் காமெடி அவருக்கு நன்றாக வருகிறது எனவும், அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும் பலரும் பதிவிட்டுள்ளனர். அதேபோல், சண்டை காட்சிகள்

சிறப்பாக இருந்ததாகவும், இதற்கு முன் சிவகார்த்திகேயனை இப்படி பார்க்கவில்லை எனவும், இப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால், சிலரோ, டாக்டர் படத்தின் திரைக்கதை ‘கோலமாவு கோகிலா’ படம் போலவே இருக்கு. கதாபாத்திரங்களும் அப்படத்தில் இருப்பது போலவே உள்ளது. அப்படம் போலவே கடத்தலை அடிப்படையாக கொண்ட கதை. இதுதான் வேற மாறியா நெல்சன்? என கிண்டலடித்துள்ளனர்.

மேலும், முதல் பாதி கலகலப்பாக செல்வதாகவும், 2ம் பாதி ஆவரேஜாக இருப்பதாகவும், பல இடங்களில் லாஜிக் குறை இருப்பதாகவும், திரைக்கதை சில இடங்களில் தொய்வாக நகர்வதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், டாக்டர் படம் உங்களை ஏமாற்றது. நல்ல டைம் பாஸ் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் கஞ்சா கடத்தல்தான் கதைக்களம். இதில், டார்க் காமெடி மிக்ஸ் பன்னி செய்திருந்தார் நெல்சன். டாக்டர் படம் ஆர்கன் கடத்தல் கதை. இதையும் டார்க் காமெடியில் செய்துள்ளார். எனவே, நெல்சன் ஒரே பாணியில் படம் இயக்குகிறார் என டாக்டர் டிரெய்லர் வெளியான போதே பலரும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா