ரிஸ்க் எடுக்காதீங்க!..அஜீத்துக்கு பக்கவாதமே வந்திருக்கும்!...எச்சரிக்கும் மருத்துவர்.....

by சிவா |
ரிஸ்க் எடுக்காதீங்க!..அஜீத்துக்கு பக்கவாதமே வந்திருக்கும்!...எச்சரிக்கும் மருத்துவர்.....
X

நடிகர் அஜித் சினிமா மீது மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர். அவர் நடித்த படங்களில் டூப் போடாமால் அவரே பைக் மற்றும் கார்களை ஓட்டுவார். சில சமயம் அது ஆபத்திலும் முடிவதுண்டு.

இதுவரை உடலில் 15 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட ஒரே நடிகர் அஜித் மட்டுமே. அதுவும் முதுகில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ரிஸ்க்கான சண்டை காட்சிகள், பைக் ஓட்டும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதிலும் வலிமை படத்தில் ஆபத்தான பல பைக் சேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார் அஜித். இப்படத்தில் அஜித் பைக்கில் வீலிங் விடுவது போல ஒரு காட்சி வரும். இதை அஜித் செய்த போது கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் வலிமை மேக்கிங் வீடியோவிலும் இடம் பெற்றிருந்தது. அதேபோல், அந்த காட்சிகளுக்கு பின் அவர் காயமடைந்த தன் உடலுக்கு சிகிச்சை பெறும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இதையும் படிங்க: செல்லாது செல்லாது.! எல்லா கோட்டையும் அழிச்சிடுங்க.! தயாரிப்பாளரை சூடேத்திய சிம்பு.!

valimai

இந்நிலையில், அஜித்துக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வரும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ்பத்மநாபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தின் உடல் நிலை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறினார்.

அஜித் கீழே விழும் காட்சியை மட்டுமே ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஆனால், ஏற்கனவே நான்கைந்து முறை அவர் பைக்கில் சண்டைகாட்சி எடுக்கும் போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். தன் வேலைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார். மேலும், கீழே விழுந்தாலும் மீண்டும் எழலாம் என்கிற செய்தியையும் அவர் தெரிவிக்க விரும்புகிறார்.

ajith

அவரது முதுகெலும்பில் 2 நிலை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அவரின் முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு அகற்றப்பட்டது. கீழ் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நிலைக்கும் அவர் சென்றார். எனவே, வலிமை படத்தில் அஜித் செய்த வீலிங் போன்ற காட்சிகளை அவரது ரசிகர்கள் விளையாட்டாக கூட செய்து பார்க்க வேண்டாம்’ என அப்பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Next Story