Actress Trisha: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகையாக த்ரிஷா இருக்கிறார். இந்திய அளவில் பேசப்பட்ட நடிகையாகவும் வலம் வரும் த்ரிஷா இப்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் பிஸியாக இருக்கிறார்.
பல பெரிய பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்த த்ரிஷாவை பற்றி முகம் சுழிக்கும் வகையில் எந்தவொரு கிசுகிசுவும் இதுவரை வந்ததில்லை. ஆனால் இன்று ஒரு அரசியல் பிரபலம் த்ரிஷாவை பற்றி வாய்கூசாமல் பேசிய அந்த விஷயம் இணையம் முழுவதும் கொழுந்து விட்டு பற்றி எரிகின்றது. இதை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சுபேர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 40 பேருடன் சண்டைக்கு நின்ற ரஜினிகாந்த்… வாட் ஏ மேன்!…
அதாவது கூவத்தூர் சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. அப்போது உள்ள சூழ்நிலையில் தன் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்கள். இப்போது அந்த ஒன்றிய செயலாளர் ராஜு கூறிய வகையில் நடிகைகளும் வரவழைக்கப்பட்டார்கள். ஆனால் த்ரிஷாவுக்கு 25 லட்சம் கொடுத்து வரவழைக்கப்பட்டார் என்பது ஆதாரமற்ற செய்தி என சுபேர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் கருணாஸும் ‘ஆட்சியை காப்பாற்ற நான் என்ன வேலை எல்லாம் செய்தேன் தெரியுமா’ என்று கூறியிருந்தார். அதற்கு கருணாஸ்தான் நடிகைகளை அழைத்து வந்தாரா என்றால் அது இல்லை. அதுவும் ஆதாரமற்ற செய்தி. அவர் பணப்புழக்கம் , மற்ற வசதிகள் செய்து தருவது என்பதைதான் கவனித்தார் என்றும் சுபேர் கூறினார்.
இதையும் படிங்க; உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!
மேலும் இதை பற்றி த்ரிஷா தரப்பில் என்ன செய்ய இருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தன்னை பற்றி ஏதோ ஒரு வார்த்தை சொன்னதற்காக மன்சூர் அலிகானையே போலீஸ் வரைக்கும் கொண்டு சென்ற த்ரிஷா இதுக்கு சும்மா இருப்பாரா? இல்லாவிடில் இது வதந்தியாகவே இருக்கட்டும் என விட்டுவிடப் போகிறாரா என்றும் சுபேர் கூறினார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் அந்த ஒன்றிய செயலாளர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இதை பார்த்த பலரும் ‘சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர் சங்கம் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் சங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்குமா? இல்லை அரசியல் பிரச்சினை எல்லாம் நமக்கு எதற்கு என சும்மா இருக்குமா? என்பதை வரும் நாள்களில் பார்ப்போம்.
இதையும் படிங்க: பாக்யராஜால் பள்ளியை விட்டே வெளியேறிய பானுப்பிரியா… அதன்பின் என்ன நடந்ததுன்னு தெரியுமா?
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…