விஜயகாந்தைத்தான் ஃபாலோ செய்ய போகிறாரா விஜய்? தளபதி 69 போஸ்டரின் ரகசியம்
Thalapathy 69: விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 8 நாட்களில் கிட்டத்தட்ட 450 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த அப்டேட் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டே இருந்தன.
விஜயின் தளபதி 69ஆவது படத்தை எச் வினோத் இயக்குகிறார் என வெறும் வதந்தியாகவே வந்த நிலையில் இன்று அதைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 69ஆவது படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்கப் போகிறது. படத்தை எச் வினோத் இயக்குகிறார். படத்திற்கு இசை அனிருத். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: வேட்டையன்ல ரஜினி, அமிதாப் வர்ற சீன் தெறிக்க விடுமாம்… அதோட பிளாஷ்பேக் இதுதான்!
கூடவே சிம்ரன் மலையாள நடிகை நமீதா பைஜு ஆகியோரும் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. எச் வினோத் ஏற்கனவே விஜயை வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக அரசியல் களம் சார்ந்த படமாக தான் எடுப்பேன் என உறுதியாகக் கூறியிருந்தார். அதுவும் இது விஜயின் கடைசி படம் என்பதால் அதன் பிறகு அவர் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போவதால் கண்டிப்பாக விஜயை வைத்து ஒரு நல்ல தரமான அரசியல் சார்ந்த படத்தை தான் எச் வினோத் கொடுப்பார் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் வெள்ளை வேட்டி சட்டையுடன் தான் வரப்போகிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி மாபெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. படத்தின் போஸ்டரில் தீப சுடரை கையில் ஏந்தியவாறு அந்த போஸ்டரில் பதிவாகி இருக்கிறது. கூடவே ஜனநாயகத்திற்கு தீபம் ஏற்றுபவர் வந்து கொண்டிருக்கிறார் என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகமும் அச்சிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சத்தியம் எல்லாம் செஞ்சியே கோபாலு… ரிலீசுக்கு பின்னர் மாற்றிய பேசிய வெங்கட் பிரபு
அதனால் இது கண்டிப்பாக மாற்று அரசியலுக்கான ஒரு முன்னெடுப்பாக விஜயின் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 69 ஆவது படத்தின் போஸ்டரும் விஜயகாந்தின் தேமுதிக கொடியில் இருக்கும் சின்னமும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் விஜயகாந்தை அரசியலை விஜய் பின்பற்றப் போகிறாரா என்ற ஒரு கேள்வியும் அனைவர் மனதிலும் எழுந்திருக்கின்றன.
ஏற்கனவே கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலமாக நடிக்க வைத்ததன் மூலம் ஒட்டுமொத்த விஜயகாந்த் ரசிகர்களையும் தொண்டர்களையும் ஓரளவு தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் விஜய். அதுவும் அந்த படத்தில் விஜயகாந்தின் முகத்திரையை கிழித்து விஜய் வருவது போல பதிவு செய்திருப்பார்கள். அதனுடைய பின்னணி என்னவென்றால் இனிமேல் விஜயகாந்திற்கு அடுத்த நிலையில் அரசியலில் விஜய் இருப்பார் என்பதைப் போல பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: போஸ்டரிலயே தரமான அரசியல்..! தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!
விஜயகாந்த் அரசியலுக்குள் வரும்போது மாற்று அரசியலுக்கான ஒரு பாதை என விஜயகாந்தை அனைவரும் நினைத்து வந்தார்கள். அதைப்போல இப்போது விஜய்யும் அரசியலுக்குள் வந்திருப்பது, அதுவும் தேமுதிக கட்சியின் சின்னத்தை தளபதி 69 படத்தின் போஸ்டரில் பயன்படுத்தி இருப்பதால் கண்டிப்பாக விஜயகாந்த் மக்களுக்காக என்னெல்லாம் செய்ய நினைத்தாரோ அதை விஜய் செய்வாரா என்ற கோணத்திலும் இந்த படத்தின் போஸ்டரை பற்றி பேசி வருகிறார்கள்.