விஜய் மகனுக்கு இம்புட்டு அறிவா? அட கதைக்களமே வேற லெவல்ல இருக்கே..!

by sankaran v |
jason sanjay and vijay
X

jason sanjay and vijay

தளபதி விஜய் தன் வாரிசை சினிமாவில் களம் இறக்கியுள்ளார். ஜேசன் சஞ்சய் ஆரம்பத்தில் அப்பாவுடன் இணைந்து ஒரு சில பாடல்களுக்கு நடனம் ஆடினார். இப்போது வளர்ந்து விட்ட அவருக்கு இயக்குனராகும் ஆசை வந்துள்ளது. அதன்படி அவர் லைகா நிறுவனத்தின் சார்பில் முதல் படத்தை இயக்க உள்ளார்.

50 நிமிடம் கதை

Also read: சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் முதுகில் பல பேர் குத்தியிருக்கிறார்கள்! பிரபலம் சொன்ன தகவல்

ஜேசன் சஞ்சய் லண்டனில் படித்தவர். தான் இயக்கும் படத்துக்கு சந்தீப் கிஷனை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்துள்ளார். தமன் இசை அமைப்பாளர். சந்தீப் கூட சமீபத்தில் ஜேசன் பற்றி இப்படி தெரிவித்துள்ளார். என்னிடம் ஜேசன் 50 நிமிடம் கதை சொன்னார். கொஞ்சம் கூட கேப் எடுக்காமல் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது என்று தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் பான் இண்டியாவுக்கான கதைகளத்தை இந்தப் படத்தில் ஜேசன் சஞ்சய் புகுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இதுகுறித்து லைகா புரொடக்ஷன்ஸ் ஜிகேஎம். தமிழ் குமரன். என்ன சொல்கிறார்னு பாருங்க.

கதை மையக்கரு

ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள் என்ற மையக்கருவை சுற்றித்தான் படம் நகரும்.

புதிய அனுபவம்

பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம் என்கிறார் தமிழ் குமரன். இதை வைத்துப் பார்க்கும்போது கதை வேற லெவலில் இருப்பது தெரிகிறது.

jason sanjay and lyca kumaran

jason sanjay and lyca kumaran

'தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்'னு சொல்வாங்க. ஜேசன் தாத்தா வழிக்குச் சென்றுள்ளார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதை தான் பலம்

பொதுவாக முதல் படம் என்றாலே பலருக்கும் ஒரு தயக்கம் வரும். அதற்காக தனக்கு துணையாக தெரிந்தவர்கள் யாரையாவது உடன் அழைப்பார்கள். ஆனால் பலத்த பேக்ரவுண்டு இருந்தபோதும் தாத்தா, அப்பா என யாரையும் அழைக்காமல் லைகாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது ஆச்சரியமாக உள்ளது. அந்த வகையில் இப்போதே சஞ்சய் தெளிவான முடிவுடன் தான் இருக்கிறார். படத்தின் கதையைத் தான் அவர் நம்புகிறார்.

இணைவதில் மகிழ்ச்சி

Also read: Kanguva: சூர்யாவுக்கு சொந்தக்காரன் திருப்பூர் சுப்பிரமணியன்.. கங்குவா குறித்து ராதாரவி பளீச்

அதனால் படத்தைக் கண்டிப்பாக ஹிட் செய்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருப்பது தெரிகிறது. இந்தப் படத்திற்காக முதலில் கவின், சூரி, விஜய்சேதுபதி என பிரபல ஹீரோக்களின் பெயர்கள் சொல்லப்பட்டதாம். ஆனால் சந்தீப் கிஷனைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அவரும் ஜேசனுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

தந்தை ஹீரோவில் தளபதின்னா ஜேசன் இயக்கத்தில் தளபதி ஆவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story