வீட்டுவிலங்குகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்கள்
வீட்டு விலங்குகள் என்றாலே எல்லோருக்கும் கொள்ளைப் பிரியம். ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய், பூனை என்று பலரும் தங்களுக்குப் பிடித்தமான செல்லப்பிராணிகளை வளர்த்து கொஞ்சி விளையாடி மகிழ்வர்.
பெரும்பாலும் மன இறுக்கம் குறைய வேண்டுமானால் கொஞ்ச நேரம் இந்த செல்லப்பிராணிகளுடன் விளையாடினாலே போதும். சரி. இப்போது தமிழ்ப்படங்களில் வீட்டு விலங்குகள் எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போமா...
ஆட்டுக்கார அலமேலு
1977ல் வெளியான படம். ஆர்.தியாகராஜன் இயக்கியுள்ளார். சங்கர் கணேஷ் இசை அமைத்த இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. சிவகுமார், ஸ்ரீபிரியா, ஜெய்கணேஷ், அசோகன், மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஆடு ஒன்று பிரமாதமாக நடித்துள்ளது. இந்தப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெள்ளி விழா கண்டது.
குவா குவா வாத்துகள்
1984ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் மணிவண்ணன். சிவகுமார், சுலக்சனா, பாண்டியன், இளவரசி, மனோரமா, சசிகலா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைததும் சூப்பர்ஹிட். நினைச்சேன், நினைச்சேன், பாயும்புலி, பொல்லாத ஆசை, தேனில் வடித்த சிலையே ஆகிய பாடல்கள் உள்ளன.
ருசி கண்ட பூனை
1980ல் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான படம் ருசி கண்ட பூனை. சுதாகர், சரிதா, விஜய்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். சந்தனமிட்டுச் சதிராடும் மொட்டு, அன்பு முகம், என் நெஞ்சம், கண்ணா நீ ஆகிய பாடல்கள் உள்ளன.
எலி
2015ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் யுவராஜ் தயாளன். வடிவேலுவின் வெடிச்சிரிப்பில் தயாரான இந்தப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. வித்யாசாகரின் இசை அருமை. இந்தப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சதா நடித்துள்ளார்.
வில்லனாக பிரதீப் ராவத் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சந்தான பாரதி, ராஜ்கபூர், சண்முகராஜன், முத்துக்காளை ஆகியொரும் நடித்துள்ளனர். படத்தைப் பார்க்கும் போது நாடகத்தைப் பார்த்தது போல இருந்தது தான் படத்தின் பெரிய மைனஸ்.
நாய் சேகர்
2021ல் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான அசத்தலான படம். கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். சதீஷ் உடன் பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன் உள்பட பலர் நடித்துள்ளனர். அஜீஸ், அனிருத், ரவிச்சந்திரன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.
கோழி கூவுது
1992ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கங்கை அமரன். பிரபு, சுரேஷ், சில்க், விஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டன. படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஏதோ மோகம், பூவே இளைய பூவே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.