ஆழம் தெரியாம காலை விடாதீங்க... ஏ.ஆர்.ரகுமான் நினைச்சா சந்தி சிரிக்க வச்சிருவாரு..!

by sankaran v |
ARR Saira banu
X

ARR Saira banu

ஏ.ஆர்.ரகுமான் தனது விவாகரத்து தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தரும் யூடியூபர்கள் மற்றும் மீடியாக்களின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனை உடனடியாக நீக்கி விடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தார். பலர் நீக்கி விட்டாங்க.

இன்னும் சிலர் நீக்காம இருக்காங்க. ஆனா சட்டரீதியா அவர் இறங்கினா எல்லாரும் சந்திக்கு வந்துருவீங்க. ஆழம் தெரியாம கால விட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன். அவரு நினைச்சாருன்னா உச்சீதிமன்றத்துலயே வச்சி வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாட முடியும்.

Also read: சிவா என் தம்பி மாதிரி.. எல்லா நேரத்துலயும் கூட இருப்பேன்! சிவகார்த்திகேயனுக்காக உருகிய தனுஷ்

ஏஆர்.ரகுமானையும் அவரது மனைவி சாய்ராபானுவையும் சேர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது. நேற்று சாய்ராபானு அருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

sairabanu arrahman

sairabanu arrahman

உலகத்துலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் தான் என்று தெரிவித்துள்ளார். எனக்குக் கடந்த 2 மாதமாகவே உடல்நலக் கோளாறு. அதனால தான் நான் மும்பை வந்தேன். அவர் இருக்குற வேலையை எல்லாம் விட்டுவிட்டு என்னோடு வந்து உட்கார்ந்துருக்காரு. அதனால என்னோட பிள்ளைகளுக்கும் கஷ்டம் வரும். இதற்காகத் தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன் என அவர் சொல்லி இருக்கிறார்.

நல்லவேளையாக இந்த நேரத்தில் சாய்ராபானு மிகத்தெளிவான அறிக்கையை வெளியிட்டாங்க. இது தெரியாம ஏ.ஆர்.ரகுமானைப் பற்றி பல அவதூறுகளைப் பரப்பிட்டாங்க. அதுதான் வேகமாகப் போய்ச் சேருகிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் போய்ச் சேர வேண்டும். கோடம்பாக்கத்தில் தொடரும் டைவர்ஸ்னு பலரும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Also read: மேடையில் அஜித் தயாரிப்பாளரிடம் சண்டைக்கு நின்ற தேவி ஸ்ரீ பிரசாத்… என்ன நடந்தது?

ஏ.ஆர்.ரகுமான் -சைரா பானு பிரச்சனை போய்க்கிட்டு இருக்கும்போதே ஜிவி.பிரகாஷ் -சைந்தவி, தனுஷ்-ஐஸ்வர்யா அடுத்து இவர்களா என 2 ஜோடிகளைப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இனிமே விவாகாரத்து தொடர்பான செய்திகளைப் போட்;டால் கொஞ்சம் விசாரிச்சிட்டுப் போடுங்க. ஏஆர்.ரகுமானை மாதிரி அப்பழுக்கற்ற மனிதர் உலகத்துலயே கிடையாது. மேற்கண்ட தகவல்களைப் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் தெரிவித்துள்ளார்.

Next Story