மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..

Published on: August 18, 2023
vadivelu
---Advertisement---

மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

உதயநிதி அரசியலில் கவனம் செலுத்தப்போவதால், இதுதான் அவரின் கடைசி படம் என்று கூறப்பட்டது. இந்த படம் குறித்து மேடையில் பேசிய வடிவேலு, இந்த படத்தில் வாய்ப்பு அளித்தற்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க- அப்போ எல்லாம் 250 நாள்!.. இப்போ 50 நாளுக்கே ஆடுறாங்க!.. மாமன்னன் டீமை மானபங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்!..

இந்த படத்தின் படக்குழுவினர் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தார்கள். இந்த படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது என் கண்கள் கலங்கியது. அதேபோல, உதயநிதி உட்பட எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிம் இசை.

இந்த படத்தில் நான் பாடிய பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒளித்துக்கொண்டிருக்கிறது. இயக்குநர் மாரிசெல்வராஜ்க்கு இந்த வேண்டுகோள். இதே போல ஒரே போன்ற படங்களை எடுத்து உடம்ப கொடுத்துக்கொள்ள வேண்டாம். கொஞ்சம் நகைச்சுவை படங்களையும் எடுக்கவும்.

ஒரே ரூட்டில் போகாமல் வித்யாசமாக, காமெடி படங்களையும் மாரி செல்வராஜ் எடுக்கவேண்டும் என்பது என் ஆசை என்று வடிவேலு தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் இதை கேட்டு சற்று கடுப்பாகிவிட்டார். மேலும் இது போன்ற படத்தில் உதயநிதி போல வேறு யாராலும் நடிக்க முடியாது.

என்னை மாமன்னனாக காட்டி, புகழையும், பேரையும் தேடி தந்த இயக்குநருக்கு நன்றி. இத்தனை ஆண்டுகள் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். பெரும்பாலும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதிலெல்லாம் கிடைக்காத புகழ், இந்த ஒரு படத்தில் கிடைத்துள்ளது என்று வடிவேலு பேசினார்.

இதையும் படிங்க- இந்த அநியாயம் பண்றீங்களேடா!.. விஷயம் புரியாம வச்ச ‘மாமன்னன்’ கவர் போட்டோவை ரிமூவ் பண்ண ஃபகத் பாசில்!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.