கோலிவுட்டின் மாபெரும் டைரக்டர்கள்… விஜயகாந்தின் மிஸ் பண்ணவே கூடாத இரண்டு படங்கள்…
தமிழ் சினிமாவின் லெஜண்டரி நடிகர் மனிதாபிமானி கேப்டன் விஜயகாந்த். அதேபோல், இயக்குநர்களில் மணிரத்னமும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல நடிகர்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த வரலாறு உண்டு. கேப்டன் விஜயகாந்த்துக்கும் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் கனெக்ஷன் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
விஜயகாந்த் - மணிரத்னம்
தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடத்தில் பல்லவி அனுபல்லவி மற்றும் மலையாளத்தில் உன்னாரு படங்களை எடுத்துவிட்டிருந்தார் இயக்குநர் மணிரத்னம். 1985-ல் வெளியான பகல்நிலவுதான் மணிரத்னத்தின் முதல் தமிழ்படம். அந்தநேரத்தில் கேப்டன் விஜயகாந்த் தமிழின் முக்கியமான ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: இது எப்ப நடந்துச்சி!.. பல வருடங்கள் கழித்து தனுஷுடன் சிவகார்த்திகேயன்!.. வைரல் போட்டோ!…
விஜயகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார்
மணிரத்னம் போலல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் விஜயகாந்த்தை வைத்து ஒரு படமே இயக்கியிருக்கிறார். நாட்டாமை, முத்து, அவ்வை ஷண்முகி என வரிசையாக மிகப்பெரிய ஹிட் படங்களை கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்திருந்த நேரம் அது. அப்போது விஜயகாந்துடன் அவர் இணைந்து எடுத்த படம்தான் தர்மசக்கரம். குறிப்பாக அவ்வை ஷண்முகிக்குப் பிறகு இந்தப் படம் வெளியானது.
இதையும் படிங்க: விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… வழக்கம்போல தெறிக்கவிடுமா?