Cinema History
அந்த சீனுக்கு மியூசிக் போடாதீங்க..! இளையராஜாவின் கையைப் பிடித்து நிறுத்திய இயக்குனர்… !
இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் இசையில் உருவாக்கிய படம் நந்தலாலா. இந்தப் படத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயங்களை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார்.
நந்தலாலான்னு எழுதின உடனே இளையராஜான்னு தான் எழுதினேன். கதை ரொம்ப பிடிச்சதும் மியூசிக் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. 5 பாட்டு போட்டுக் கொடுத்தாரு. 2 பாட்டை எடுத்துட்டேன். ரீ ரெக்கார்டிங்க் எல்லாம் பண்ணும்போது பெரிய சண்டை.
42வது நாள் படத்துக்கு சூட் பண்ணும்போது தம் அடிச்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தேன். பார்த்தா தண்ணில வந்து இலைகள், செடிகள் எல்லாம் போகுறதைப் பார்த்தேன். ‘அடடா இதுதான் ஷாட்’னு மறுநாள் காலைல ஒரு ஃபுல் டேவும் அதை எடுத்தோம்.
எடுத்து முடிச்சிட்டு பர்ஸ்ட் சீன்னு இளையராஜாகிட்ட போட்டுக் காட்டினோம். ‘ரொம்ப எக்ஸ்ட்ராடினரியா இருக்கு…’ன்னு கீ போர்ட்ல கையை வச்சி மியூசிக் போட ஆரம்பிச்சாரு. சார்னு நான் டக்குன்னு அவரு கையைப் புடிச்சிட்டேன். ‘இதுக்கு என்ன சார் பண்ணப் போறீங்க?’ன்னு கேட்டேன்.
‘இதுக்கு ஒரு எக்ஸ்ட்ராடினரியா மியூசிக் போடப்போறேன்”னாரு. ‘சார் சார் போட்ராதீங்க சார்…’னு சொன்னேன். இது எப்படின்னா முதல் படத்துல முதல் ரீ ரெக்கார்டிங்க். ‘என்னது டைட்டில் இவ்ளோ அழகா இருக்கு. இதுக்கு போயி மியூசிக் போடாதேங்கறீய..?’ ன்னு சொன்னாரு. ‘அதான் சொல்லிட்டீங்களே அழகா இருக்குன்னு. அந்த அழகுக்கு மேல நீங்க எதுக்கு மியூசிக் போடப்போறீங்க?’ன்னு கேட்டேன்.
‘டேய்… நான் 45 வருஷம் டைட்டில்ல மியூசிக் போடாம இருந்தது இல்லை’ன்னு கோபத்துடன் சொன்னாரு. ‘ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தப் படத்துக்கு மியூசிக் போடாம இருங்க சார்’னு சொன்னேன். ‘அப்படியா… ரசிகர்கள்லாம் ஒத்துக்க மாட்டாங்க’ன்னு சொன்னாரு. ‘உங்க ரசிகர்கள் ஒத்துக்கவே வேணாம் சார்’னு சொன்னேன். கடைசில ரொம்ப கோபமா ஆயிட்டாரு. எனக்கு இது பற்றி எல்லாம் முன்னாடியே தெரியும். உடனே ‘வெளியே போ…’ன்னு சொன்னாரு. போயிட்டேன். திரும்ப போன் போட்டு கூப்பிட்டார்.
இதையும் படிங்க… வாய்ப்புதான் இல்ல! ஆனால் அதுல இவர்தான் நம்பர் ஒன்.. வேறு எந்த நடிகர் படத்திலும் இல்லாத ஒரு புதுமை
அப்புறம் ‘இங்கே எந்த இடத்துல மியூசிக் போடணும்?’னு கேட்டார். ‘நீ என்னை ரொம்ப டிக்டேட் பண்ற..’ன்னு சொன்னாரு. அப்புறம் போனதுமே கால்ல விழுந்துடுவேன். எல்லா பாவத்தையும் கழுவிடுவேன். அப்புறம் எனக்கு இப்படித்தான் வேணும்னு சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.