More
Categories: Cinema History Cinema News latest news

டபிள் மீனிங் வசனம் கொண்ட தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை

தமிழ்சினிமாவில் டபிள் மீனிங் படங்கள் என்றால் இளசுகள் வட்டமடித்தபடி திரையரங்கை மொய்க்கும். ஏன்னா அதுல கிக் அதிகம். பொதுவாகவே நிர்வாணமாகப் பார்ப்பதை விட பட்டும் படாமலும் காட்டி அதைப் பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரு வித இன்பக்கிளர்ச்சி உண்டாகும்.

அது போலத் தான் பச்சையாக பேசுவதை விட டபிள் மீனிங்கில் புரிந்தும் புரியாதது போல இருக்கும் வார்த்தைகள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இதைத் தெளிவாகப் பேசினால் தான் அவர்கள் விவரம் தெரிந்த யூத்கள் ஆகின்றனர் என சிலாகிப்பதுண்டு.

Advertising
Advertising

சரி…இனி தமிழ்சினிமாவிலும் இந்த தீ பற்றி எரிகிறது. அப்படி பற்றி எரியவிட்ட படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா…

உள்ளே வெளியே

ulle veliye

பார்த்திபன் படங்கள் என்றாலே அதில் டபுள் மீனிங் வசனங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கும். ஆரம்பகால படங்களில் இந்த வாடை அதிகம் வீசியது. உதாரணமாக புதிய பாதை, உள்ளே வெளியே படங்களைச் சொல்லலாம். அதிலும் உள்ளே வெளியே படத்தில் கதாநாயகியாக வரும்

ஐஸ்வர்யாவுடன் இவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் உற்றுக்கவனித்தால் டபுள் மீனிங்காகத் தான் இருக்கும். இதனாலேயே ரசிகர்கள் இந்தப்படத்திற்கு அமோக வெற்றியைத் தந்தனர். உதாரணத்திற்கு கிட்டிப்புல் உள்ளேயும் வெளியேயும் சும்மா பூந்து விளையாடும்போது இடைகொட்டாமல் ரசிகர்கள் படத்தைப் பார்ப்பார்கள்.

இருட்டறையில் முரட்டு குத்து

2018ல் வெளியான படம். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் கதாநாயகி. வைபவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்யா கௌரவத்தோற்றத்தில் வருகிறார். இந்தப்படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் ஏராளம்.

ஒங்கள போடணும் சார்

2019ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர்கள் ஆர்.எல்.ரவி, ஸ்ரீஜித் விஜயன். ஜித்தன் ரமேஷ், ஜோன்ஹா டோடா, அனு நாயர், பரிஜிதா சிங்கா, வைஷாலி உள்பட பலர் நடித்துள்ளனர். ரெஜ்மோன் இசை அமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் டைட்டிலைப் பார்த்தால் ஒரு மாதிரியா இருக்கேன்னு நீங்க நினைத்தால் அது மகா மகா தப்பு. இதன் பொருள் என்னவென்றால் உங்களைக் கொல்லணும்னு அர்த்தமாம்.

கடலை போட ஒரு பொண்ணு வேணும்

இந்தப்படத்திற்கு முதலில் – போட ஒரு பொண்ணு வேணும்னு விளம்பர போஸ்டர்கள் எல்லாம் ஒட்டினாங்க. அது ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டது. அப்புறம் படம் வந்ததுக்கு அப்புறம் தான் கடலை போட ஒரு பொண்ணு வேணும்னு சொன்னாங்க.

இந்தப்படத்தில் யோகி பாபு நடித்து அசத்தியுள்ளார். ஆனந்த்ராஜன் இயக்கியுள்ளார். இவர் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். 2019ல் வெளியானது. படம் பக்கா காமெடி படமாம்.

ஹரஹர மகாதேவகி

Hara Hara Mahadevaki

2017ல் வெளியான படம். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ளார். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க.

இவரு தான…இருட்டறையில் முரட்டு குத்து பாடலை எழுதி இசை அமைத்துள்ளார். கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

எக்ஸ் வீடியோஸ்

x videos

சாஜோ சுந்தர் இயக்கத்தில் 2018ல் வெளியான படம். அஜய் ராஜ், அகிரிட்டி சிங்க், ரியா மிகா, அபினவ், அபிஷேக், அஜய் தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர்.

எக்ஸ் வீடியோ என்பது பிரபல ஆபாச இணையதளம். இந்தத் தளத்தைப் பார்க்கக்கூடாது என்பதைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் இது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

2018ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.ஆப்.முகேஷ். விமல், ஆஷனா சவேரி, பூர்ணா, ஆனந்த் ராஜ்,சிங்கம்புலி, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். படத்தின் டைட்டில் நம்மை எங்கோ ஒரு அர்தத்திற்கு அழைத்துச் செல்வது போல இருக்கும்.

இதற்கு என்ன காரணம் என்றால் அப்போது தானே நாம் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கப் போவோம். இது ஒருவித தொழில் தந்திரம் என்றே சொல்லலாம். தற்போது இதுபோன்ற பெயர்கள் வைப்பது ட்ரெண்டாகி வருகிறது.

திரிஷா இல்லனா நயன்தாரா

Thrisha illanna nayanthara

2015ல் வெளியான இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். உடன் ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சிம்ரன், விடிவி. கணேஷ், யூகி சேது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நாம் பேச்சுவழக்கில் உபயோகிக்கும் தமிழ் தற்போது சினிமாப்பட தலைப்புகளுக்கும் ட்ரெண்டாகி வருகின்றன.

Published by
sankaran v

Recent Posts