Connect with us
sneha

Cinema News

சினேகாவுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?!.. போட்டு உடைச்சிட்டாரே பிரசன்னா?!…

தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் சினேகா. கவர்ச்சியை நம்பி களம் இறங்கும் நடிகைகள் மத்தியில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சாவித்ரி போல, பானுமதி போல கவர்ச்சி காட்டாமல் நடிப்பேன் என சொன்னவர் இவர்.

புடவை மற்றும் சுடிதார் அணிந்தே பல திரைப்படங்களிலும் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹீரோவை உருகி காதலிக்கும் பெண் கதாபாத்திரம்தான். லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் இவருக்கு அமைந்த ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’ பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

இதையும் படிங்க: காலேஜ் படிக்கும் போது காதலில் விழுந்தாரா விஜய்?!.. அதனால்தான் காதல் படங்களில் அப்படி நடிச்சாரா?!..

அதன்பின் விஜய், விக்ரம், சூர்யா, ஸ்ரீகாந்த் என பலருடனும் நடித்தார். விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தார். அஜித்துடன் ஜனா என்கிற படத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் அவரின் தம்பி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் தெலுங்கில் அண்ணி, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழிலும் சில படங்களில் நடித்தார். இப்போது விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விடிய விடிய பார்த்தாலும் சலிக்காது!.. ஒன் சைட் அழகை மூடாம காட்டும் கேப்ரியல்லா!…

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரசன்னா சினேகாவுக்கு ஓசிடி (OCD – Obessive Compulsive Disorder) என சொல்லப்படும் நோய் இருப்பதாக சொல்லி அதிலிருந்து தப்பித்த ஒரே ஆள் நான்தான் என சொல்லி சிரித்தார். அருகிலிருந்த சினேகாவோ ‘ஆமாம் எனக்கு ஓசிடி பிரச்சனை இருக்கிறது. எனக்கு வீடு, கிச்சன் என எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும்’ என சொல்லி இருக்கிறார்.

ஓசிடி என்பதில் பலவகை இருக்கிறது. வீட்டில் பூட்டு போட்ட பின்னரும் திரும்ப திரும்ப அதை செக் செய்து பார்ப்பது ஒருவகை ஓசிடிதான். அதேபோல், வீட்டை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பதும் ஒரு வகை ஓசிடிதான். இதுதான் சினேகாவுக்கு இருப்பதாக பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top