மொத்தமே 5 படம்தான்! கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷின் சொத்து மதிப்பு இவ்வளவா? - ஆச்சரியம்தான்

by Rohini |
loki
X

loki

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இன்றைய சினிமா முழுவதும் இளம் இயக்குனர்களால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் ஆதிக் , ஒரு பக்கம் நெல்சன் , இன்னொரு பக்கம் லோகேஷ் என பல புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சினிமாவை எங்கேயோ கொண்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று இமயம் மாதிரி அண்ணாந்து பார்க்க வைத்த லோகேஷின் சொத்து மதிப்பு பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. மாநகரம் என்ற குறைந்த பட்ஜெட்ட்டில் நல்ல கதைகளத்தோடு தன்னுடைய முத அறிமுகத்தை இந்த படத்தின் மூலம் பதிவு செய்தார்.

இதையும் படிங்க : வடிவேலுவை திட்ட பயந்து நின்ன துணை நடிகர்! பார்த்திபன் சொன்ன டிரிக் – இந்த சீன் இப்படித்தான் உருவாச்சா?

முதல் படம் கதைக்காக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கைதி என்ற ஒரு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்து ஒரு சாங்ஸ் கூட இல்லாமல், டூயட் எதுவும் இல்லாமல் படத்தை எடுக்க முடியுமா என்பதை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

அதனை அடுத்து மாஸ்டர், பின் விக்ரம் என பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து தன் திறமையை வெளிக் காட்டினார். யாரை வாழ் நாளில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு ரசிகராக இருந்தாரோ கடைசியில் அவரை வைத்தே விக்ரம் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்து கமலுக்கும் பெருமை சேர்த்தார்.

இதையும் படிங்க: நீ ஒரு முடிவோடதான் இறங்கி இருக்க!.. பாதி உடையில் பவுசு காட்டும் விஜே பார்வதி…

இப்போது மீண்டும் லியோவில் விஜயுடன் கூட்டணி அமைத்து அதுவும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனால் லோகேஷின் மார்கெட்டும் உயர்ந்தது. அடுத்ததாக ரஜினியுடன் ரஜினி171 படத்தை லோகேஷ்தான் இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்காக லோகேஷின் சம்பளம் 30 கோடியிலிருந்து 40 கோடி வரை என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லோகேஷின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. அவருடைய மொத்த சொத்து மதிப்பே 40 கோடிதான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: டவுசர் கூட போட மாட்ட! நீதான் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுப்பியா?!.. வீடியோ ஆதாரத்தோடு கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Next Story