இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று திடீரென மாலை காலமானார். இது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பிரம்மாண்டமான இயக்குனருக்கு இப்படி ஒரு புத்திர சோகமா என பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மனோஜிடம் டிரைவராகவும், தோட்டக்காரராகவும் பணியாற்றியவர்கள் இதுகுறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க.
மனோஜின் டிரைவர் ஒருவர் இப்படி சொல்கிறார். கொரானா டைம்ல நிறைய ஹெல்ப் பண்ணிருக்காரு. 10 வருஷமா டிரைவரா வேலை பார்த்தேன். நல்ல மனுஷன். நல்ல உதவி செய்ற மனம் படைத்தவர். திடீர்னு இறந்தது மனசே தாங்க முடியல. எங்கே பார்;த்தாலும் விஷ் பண்ணுவாரு. யாரு கூட வேணாலும் செல்பி எடுத்துக்குவாரு. 20 நாள்;தான் உடம்பு சரியில்லாம இருந்தாரு. ஐசியுல இருந்து வீட்டுக்கு வந்தாரு. 6.30மணிக்கு வீட்டுல தான் உயிர் போச்சு. என்கிறார்.
வீட்டில் வேலை பார்த்த தோட்டக்காரர் ஒருவர், 10வருஷமா அவரு வீட்டுல வேலை செஞ்சேன். என் கையைத் தூக்கி அவரு தோள் மேல போட்டுக்குவாரு. பூச்செடி, கத்திரிக்காய், பாகற்காய் செடி எல்லாம் நான் தான் வைச்சேன்.

நல்ல ஆளு. இப்போ வேலைல இல்லை. அவர் இறந்தது தெரிந்ததும் வந்து பார்த்தேன். செக்யூரிட்டி சொன்னாங்க. எனக்கு பக்குன்னு ஆச்சுது. உள்ளே போய் பார்த்தேன். அம்மா வந்து பார்த்தாங்க. என் பையன் போக மாட்டானே. என்னை விட்டுப் போக மாட்டானேன்னு சொல்லி அழுதாங்க என்று கண்ணீர் மல்க கூறினார்.
பாரதிராஜா தன் மகனையும் எப்படியாவது திரையுலகில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி பிரபலமாக்கியவர். தன் மகனையும் அறிமுகப்படுத்தி பெரிய ஆளாக்க நினைத்தார். தாஜ்மகால் என்ற படத்தை அவனுக்காகவே இயக்கினார்.
ஆனால் பாடல்கள் நல்லா இருந்ததே தவிர படம் ஓடவில்லை. அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் எதுவும் எடுபடவில்லை. இயக்குனர் ஆக்கியும் பார்த்தார். மார்கழித்திங்கள் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இதுவே மனோஜிக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.