
Good bad Ugly: அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து பிரபல இசையமைப்பாளர் விலகி இருப்பதாகவும் அவருக்கு பதில் முக்கிய பிரபலம் உள்ளே வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் ஒரு படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடக்க இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்களும் படத்தின் ரிலீஸுக்காக ஆவலாக காத்திருக்க தொடங்கி விட்டனர். ஒருபக்கம் விடாமுயற்சி படப்பிடிப்பே இழுத்துக்கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு சம்மர் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தாமதமாவதை கணித்த அஜித் உடனே ஆதிக் ரவிசந்திரன் படத்தில் இணைந்தார்.
இப்படத்தினை தெலுங்கின் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. மார்க் ஆண்டனி வெற்றிக்கு பின்னர் ஆதிக் ரவிசந்திரன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரும் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
அஜித் நடிப்பில் பரபரப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருக்கு பதில் படத்தில் அனிருத்தை ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: படம் குப்பை.. சூர்யாவை ஏன் திட்டுறீங்க? கொந்தளித்த அஜித்தின் நலம் விரும்பி
இந்த விஷயம் கசிந்த நிலையில் இருந்து எப்பையுமே அனிருத் தானா புது மியூசிக் டைரக்டரே உங்களுக்கு கிடைக்கலையா எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. இப்படம் வரும் ஜனவரி 10ந் தேதி வெளியாக தயாராகி இருக்கும் நிலையில் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் ஒரு மாதம் ரிலீஸுக்கு இருக்கும் நிலையில் அட்டகாசம் பண்றீங்களே. அஜித் பேன்ஸ் நாங்க எல்லாத்தையும் பொறுத்துப்போம்னு நினைக்கிறீங்களா எனவும் கேள்வி எழுந்துள்ளது.