Cinema News
தான் வயிறு நிறைஞ்சா மட்டும் போதுமா? சூடுபிடிக்கும் விஜயின் சம்பள பிரச்சினை – சுத்தி சுத்தி கோல் அடிச்சா எப்படி?
Vijay’s Salary : தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். எந்தளவுக்கு புகழை சம்பாத்திக்கிறாரோ அதே அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். நாளை விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.
இசை வெளியீட்டு விழாதான் நடக்கவில்லை. டிரெய்லரையாவது பார்த்து மகிழ்வோம் என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், இசை வெளியீட்டு விழா ரத்து என தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: வாலி படத்துக்காக நீதிமன்றம் ஏறிய எஸ்.ஜே.சூர்யா..! இத்தன வருஷம் கழிச்சு என்ன பிரச்னையோ?
இந்த நிலையில் கூடுதலாக இன்னும் ஒரு புதிய பிரச்சின்னை வந்து சேர்ந்திருக்கிறது. லியோ படத்திற்காக விஜயின் சம்பளம் 125 கோடியாம். அடுத்தப் படமான தளபதி68 படத்திற்கு விஜயின் சம்பளம் உயர்ந்து 200 கோடியாகியிருக்கிறது.
விஜயின் சம்பளம் உயர்ந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் படத்தில் பணியாற்றும் முக்கியமான சில டெக்னீசியன்களின் சம்பளத்தில் கைவைத்துள்ளனர். கிட்டத்தட்ட 75 கோடி உயர்ந்துள்ளதால் அந்த 75 கோடியை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விஜய்க்காக வேலை பார்த்தவர்களின் அடி வயிற்றில் கைவைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இத்தனை பெண்களுடன் காதலா? கேள்வி கேட்ட நிரூபருக்கு சாட்டையடி பதில் கூறிய கமல்
லியோ படத்தின் கேமரா மேன் சித்தார்த் உன்னி ஏகப்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். இதுவரை 1 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவரின் சம்பளத்தை இப்போது 60 லட்சமாகக் குறைத்துள்ளனர். கேட்டால் விஜய் படத்தில் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லி தட்டிக் கழித்து விடுகின்றனர்.
இதெல்லாம் விஜய் காதுக்கு போனதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் சம்பளத்தை நம்பி எத்தனையோ மக்கள் காத்துக் கொண்டிருக்க திடீரென இப்படி செய்வது நியாயமே இல்லை என்றுதான் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!
அதுமட்டுமில்லா விஜயின் சம்பளம் உயர்ந்துள்ளதால் மற்ற கலைஞர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டியிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க வேண்டியிருக்கிறதாம். இந்த ஒரு மனுஷனுக்காக என்னெல்லாம் பண்றாங்க பாருங்க என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.