Thuglife: ஒரு ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கப்போரா!... கடைசில ஆண்டவரையும் இப்படி மாத்திட்டீங்களேப்பா?!...

by ramya suresh |   ( Updated:2024-11-08 08:10:36  )
Thuglife: ஒரு ரிலீஸ் தேதிக்கு இவ்வளவு அக்கப்போரா!... கடைசில ஆண்டவரையும் இப்படி மாத்திட்டீங்களேப்பா?!...
X

#image_title

தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு கடைசிநாள் வரை குழப்பம் நீடித்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை டீசராக படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க: Vijay: விஜய் எல்லாரையும் கேரவனுக்குள்ள விடுவாரா?!… இன்னும் 500 நாள் இருக்கு… பிரபல நடிகர் தடாலடி!…

ஏற்கனவே கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இன்றளவும் கிளாசிக் ஹிட்டாக இருந்து வரும் நிலையில் பல வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து சிம்புவும் நடிக்கின்றார். சிம்புக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கின்றார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு டிசம்பர் மாதமே படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு சற்று தள்ளிப்போன காரணத்தால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. நேற்று வெளியாகும் டீசரிலும் ஏப்ரல் 10ம் தேதி தான் இப்படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஜூன் 5ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று ரிலீஸ் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

thuglife

இது கமலஹாசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததோ இல்லையோ சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக சிம்புவின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் தொடக்கத்திலாவது தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. மேலும் ரிலீஸ் தேதி முடிவு செய்வதில் பட குழுவினருக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்து வந்ததாம். முதலில் இந்த திரைப்படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்திருந்தார்களாம். அதன் பிறகு மணிரத்தினம் சில செண்டிமெண்ட் காரணமாக படத்தை ஜூன் 5ஆம் தேதி வெளியிடும் படி கூறியதால் இரண்டு தேதியில் டைட்டில் டீசரை படக்குழுவினர் தயார் செய்து வைத்திருந்தார்களாம்.

இதையும் படிங்க: Dhanush: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? தனுஷின் ஸ்கெட்ச் வித்தியாசமா இருக்கே..

அதன் பிறகு கமலஹாசனும் ஜூன் 5ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று கூறியதால் கடைசி நேரத்தில் ஜூன் ஐந்தாம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். கமலஹாசன் இப்படி கூறியதற்கு பின்னால் ஒரு செண்டிமெண்ட் இருப்பதாக கூறப்படுகின்றது.

அதாவது கடந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனால் மீண்டும் ஜூன் மாதமே வெளியிடுவதற்கு கமலஹாசன் முடிவு செய்திருந்தாராம். கமலஹாசனுக்கு இந்த சென்டிமென்ட் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அப்படி இருந்த நபரை மணிரத்தினம் இப்படி மாற்றிவிட்டாரே என்று கோலிவுட் வட்டாரங்களில் பலரும் பேசி வருகிறார்கள்.

மேலும் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாவதற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது. அதாவது நடிகர் யஷின் டாக்சிக் திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி தான் வெளியாகின்றது. அதைத் தொடர்ந்து சல்மான்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. வெளிநாடுகளில் இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் வெளியாகும்.

மேலும், மம்முட்டி நடிப்பில் உருவான ஒரு திரைப்படம், மோகன்லால் நடிப்பில் உருவான ஒரு திரைப்படமும் அந்த ஏப்ரல் 10-ம் தேதியை சுற்றிதான் வெளியாக இருக்கின்றது. இதையெல்லாம் யோசனை செய்த படக்குழுவினர் அந்த தேதி வேண்டாம் என்று முடிவு எடுத்து ஜூன் 5-ம் தேதி மாற்றி வைத்திருக்கிறார்கள்.

Next Story