இருக்கறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்ட துல்கர்… இப்போ அதுக்கும் ஆப்படிச்சிட்டாங்களே!
Dulquer: நடிகர் துல்கர் சல்மானின் திடீர் முடிவால் அவரின் சினிமா கேரியரில் பெரிய குளறுப்படி நடந்து இருக்கிறது. இதுக்கு அந்த படத்திலே இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கிசுகிசுக்க தொடங்கி விட்டனர்.
பொதுவாக முன்னணி நடிகர்கள் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க அழைத்தால் உடனே வந்து நடித்து கொடுத்து விடுவார்கள். அதற்கு காரணம் கதையை விட அந்த பிரபலத்தின் அந்தஸ்த்தால் நமக்கும் கொஞ்சம் புகழ் கிடைக்கும் என்பது தான்.
இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..
ரஜினியின் வேட்டையன் படத்தில் கூட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதுப்போலவே, கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாக இருந்த தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு முக்கிய வேடத்துக்கான வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
இதுமட்டுமல்லாமல், சூர்யாவின் நடிப்பில் உருவாக இருக்கும் புறநானூறு படத்திலும் துல்கர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ச்சியாக தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பிஸி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழில் புறநானூறு படத்தினை விட துல்கருக்கு தக் லைஃபில் சின்ன வேடம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆரம்பமே பிரச்னையா? இன்னும் தனுஷும், அருண் மாதேஸ்வரனும் என்ன செய்ய காத்திருக்காங்களோ?
அதனால் முக்கிய முடிவெடுத்த துல்கர் சல்மான கமலின் படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார். அந்த நேரத்தில் புறநானூறு படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், கங்குவா தாமதம், சூர்யாவின் மற்ற படங்களால் புறநானூறு திரைப்படத்தினை நிறுத்தி வைத்து இருக்கிறார்களாம்.
மேலும், பிரியாடிக் படம் என்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறதாம். படத்தின் கதையிலும் சில மாற்றங்களை சுதா கொங்கரா செய்ய இருக்கிறாராம். தேர்தல் சமயம் என்பதால் காலேஜில் ஷூட்டிங் அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்படுமாம். இந்த பிரச்னை எல்லாம் முடிந்தால் ஜூன் மாதத்திற்கு பிறகு படம் முன்னேறும் எனவும் கிசுகிசுக்கின்றனர்.