Categories: latest news tamil movie reviews

டங்கி ட்விட்டர் விமர்சனம்: 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி சம்பவம்.. செம ஷாருக்கான்!

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய முன்னாபாய் எம்பிபிஎஸ் படம் தான் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ். அதே போல அமீர்கான், மாதவன் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தை ஷங்கர் இயக்கி விஜய், ஜீவா மற்று ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பிகே, சஞ்சு என அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி மீண்டும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசிக்கும்படியான ஒரு படத்தை தற்போது கொடுத்திருப்பதாக படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் காலையில் இருந்தே சோஷியல் மீடியாவில் ஹாஷ்டேக் போட்டு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டுக்கு வந்த பிரபலத்தின் காலை அளவெடுத்த ரஜினி.. மனுஷன் இப்படியெல்லாம் யோசிப்பாரா?!..

ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்டோர் நடித்துள்ள டங்கி திரைப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ள நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர்பீஸ்  திரைப்படம் என்றும் இந்தியாவில் இருந்து இப்படியொரு நல்ல தரமான பொழுதுபோக்கு திரைப்படம் வரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என படத்தை நியூசிலாந்தில் இருந்து விமர்சகர் ஒருவர் பாராட்டி 5 ஸ்டார் கொடுத்துள்ள ஸ்க்ரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

மேலும், சாதாரண ஃபேமிலி டிராமாவாக வெளியாகி உள்ள டங்கி படத்தை பார்க்க இந்தி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அதிகாலையிலேயே தியேட்டர்களுக்கு படையெடுத்து சென்று விட்டனர். அவர்கள் தியேட்டர்களை திருவிழா போல கொண்டாடும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: சியான் விக்ரம் தூக்கத்தை கெடுத்த சூரி!.. அந்த தேதியிலும் தங்கலானுக்கு சிக்கல் வரும் போல தெரியுதே!

இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் 1000 கோடி வசூலை ஈட்டிய நிலையில், அடுத்த 1000 கோடி லோடிங் என கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகி உள்ள டங்கி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாளை முதல் பிரபாஸின் சலார் திரைப்படம் நாடு முழுவதும் போட்டிக்கு வரும் நிலையில், எந்த படம் இந்த வாரம் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கப் போகிறது என்கிற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

Published by
Saranya M