3 மடங்கு அதிக சம்பளம்!.. தனுஷ் பட இயக்குனரை தட்டி தூக்கிய லெஜண்ட் சரவணா…

Published on: December 21, 2023
legend
---Advertisement---

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர்தான் இந்த லெஜெண்ட் சரவணா. தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் முதலாளி இவர். துணிக்கடை, நகைக்கடை என இவர்களுக்கு பல ஊர்களிலும் பல கிளைகள் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகளிலும் இந்த கடையின் கிளை இருக்கிறது.

ஒருநாளைக்கு கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் பணக்காரர் இவர். இவரின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்கள்தான். துவக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் விளம்பர படங்களில் சரவணா நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: ரசிகர்களை மொத்தமா ஏமாற்றிய கமல் – மணிரத்னம்!. நல்லா சிறப்பா செஞ்சிட்டாங்கப்பா?..

ஹன்சிகா, தமன்னா பலருடன் சேர்ந்து பர்பாமன்ஸ் செய்தார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவே எல்லோரும் ‘சினிமாவில் எப்போது நடிப்பீர்கள்?’ என கேட்க, துவக்கத்தில் மறுத்துவந்த சரவணன் ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தார். தன்னை ஹீரோவாக போட்டு யாரும் படம் தயாரிக்க மாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டு, தானே சொந்த காசை போட்டு படமெடுத்தார்.

legend saravanan

 

அவரை வைத்து விளம்பர படங்களை எடுத்த ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்க ‘லெஜெண்ட்’ என்கிற படம் உருவானது. நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா என பலரையும் நடிக்க அழைத்தபோது எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட அப்படத்தில் ஒரு மும்பை மாடல் அழகி கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் வெற்றியை பெறவிலை.

இதையும் படிங்க: தளபதி68 இந்த படத்தின் காப்பியா.. இது விஜயிற்கே முதல்முறை தானாம்… ஆச்சரிய தகவல்..

கடந்த ஒரு வருடமாக 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட சரவணனுக்கு எந்த கதையும் பிடிக்கவில்லை. இந்நிலையில், எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடந்தது என்னவெனில், துரை செந்தில்குமாருக்கு லெஜண்ட் சரவணா தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால், அவரை வைத்து படமெடுத்தால் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்வார்கள் என்பதால் தயங்கியுள்ளார்.

durai

ஆனால், அவரின் நட்பு வட்டாரங்கள் ‘இது உனக்கு நல்ல வாய்ப்பு. போய் படமெடுங்கள்’ என சொல்ல, அவரை பார்த்து ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை சரவணனுக்கு பிடித்துப்போக இது டேக் ஆப் ஆகவுள்ளது. அதோடு, இப்போது துரை செந்தில்குமார் வாங்கும் சம்பளத்தில் 3 மடங்கு கொடுக்குமாறு லெஜெண்ட் சரவணா சொல்லியிருக்கிறாராம்.

இதையும் படிங்க: ரஜினிகிட்ட எனக்கு இருக்க ஒரே வருத்தம் இதுதான்!.. ஃபீலிங்ஸ் காட்டும் குஷ்பு…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.