சிறு குழந்தைகளாகவே மாறிய எம்ஜிஆர் - சிவாஜி: அந்த கால நடிகர் சங்கத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள்!

Nadikar Sangam: நடிகர் சங்கம் என்பது சினிமா கலைஞர்களின் பாதுகாப்பு, அவர்களின் மீதுள்ள அக்கறை, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது இவைதான் நடிகர் சங்கத்தின் தலையாய கடமை. நடிகர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதலில் நடிகர் சங்கம் தான் வந்து அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள நடிகர் சங்கம் அதை செய்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

உதாரணமாக மன்சூர் அலிகானின் சரக்கு படத்திற்கு வந்த பிரச்சினையால் பத்திரிக்கையாளர்களை அழைத்து அழாத குறையாக தன் வருத்தத்தை தெரிவித்தார் மன்சூர். ஆனால் நடிகர் சங்கம் என்ன செய்தது? எத்தனையோ கலைஞர்கள் சமீபகாலமாக உடல் நிலை சரியில்லாமல் இறந்து போனார்கள். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக என்ன செய்தது நடிகர் சங்கம்?

இதையும் படிங்க: ரஜினியைப் பார்த்ததும் அறைக்குள் மது பாட்டிலுடன் பம்மிய செந்தில்… அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!

ஆனால் எம்ஜிஆர் - சிவாஜி இருந்த காலத்தில் நடிகர் சங்கம் எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள். பழம்பெரும் நடிகையான எம்.என். ராஜம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் இவர்தானாம். அதனால் சமீபத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளால் ராஜம் கௌரவிக்கப்பட்டார்.

ஒரு பழைய நடிகையை அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருக்கிறது. அந்த காலத்தில் விடுமுறை இல்லாமல் ஓயாமல் உழைத்த தருணம். அதனால் கொஞ்சம் நடிகர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த அஞ்சலி தேவி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையில் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என உத்தரவிட்டாராம்.

இதையும் படிங்க: செக்க கொடுத்து நான் பட்ட பாடு! சிவகார்த்திகேயனிடம் மாட்டிக்கிட்டு முழிச்ச பிரபல இயக்குனர்

அதே போல் நடிகர் சங்கத்திற்குள் அவ்வப்போது விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெறுமாம். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி போன்றோர்கள் நடுவர்களாக இருக்க சாவித்ரி, பத்மினி, அஞ்சலி தேவி, கே.ஆர்.விஜயா, ராஜம் இவர்கள் எல்லாம் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொண்டார்களாம். தீர்ப்பை சொல்ல நடுவர்கள் கப்சிப்னு இருக்க இப்படி தீர்ப்பை சொன்னாராம் சிவாஜி.

‘சாவித்திாி முதலில் வந்தாா், அஞ்சலிதேவி இரண்டாவதாக வந்தார், பத்மினி மூன்றாவதாக வந்தாா். இவர்களை எல்லாம் விரட்டிக்கொண்டு வந்த ராஜம், கே.ஆர்.விஜயா எல்லாம் கடைசியாக வந்தார்கள்’ என சிவாஜி கூற அங்கிருந்த அனைத்து நடிகர்களும் சிரிப்பு மழையில் நனைந்து விட்டார்களாம். இப்படி மகிழ்ச்சியாக அந்த காலத்தில் இருந்தோம் என ராஜம் கூறினார்.

இதையும் படிங்க: முதல்ல வீட்ட பாரு… அப்புறம் நாட்டை பார்ப்போம்!.. விஜயை விளாசிய பயில்வான் ரங்கநாதன்…

எல்லாத் துறைகளிலும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் சினிமா நடிகர்கள்தான் பெரும்பாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். அதனால் தற்கொலைக்கும் முற்படுகிறார்கள். இதை தவிர்க்க அவ்வப்போது நடிகர் சங்கம் ஒரு கூட்டத்தை கூட்டி நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன? என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். அல்லது அந்த காலத்தில் செய்ததை போல ஒரு புத்துயிர் கொடுக்கும் விதமாக சின்ன சின்ன நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தி அவர்களின் மனதை பக்குவப்படுத்த வேண்டும்

 

Related Articles

Next Story