இப்படி நின்னா நாங்களாம் ஏங்கி போயிடுவோம்!.. ஜொள்ளுவிட வைக்கும் சார்பட்டா பட நடிகை!..
Dushaa vijayakan: திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்த பக்கா தமிழ் பெண்தான் துஷரா விஜயன். பொறியியல் பட்டதாரியான இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசையும் வர ‘போதை ஏறி புத்தி மாறி’ என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் ‘அன்புள்ள கில்லி’ என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்திற்காக வட சென்னை மொழியையும் அவர் கற்றுக்கொண்டார்.
சார்பட்டா பரம்பரை படம் வெளியானபோது இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பின் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தில் நடித்திருந்தார். மேலும், கழுவேறி மூக்கன் என்கிற படத்திலும் நடித்த அவருக்கு வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்திலும் துஷராவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்போது ரஜினியின் வேட்டையன் படத்திலும், தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரின் 50வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த 2 படங்களுக்கும் பின்னர் மேலும் நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், துஷராவும் மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், புடவையில் கட்டழகை காட்டி துஷரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.