Connect with us

Cinema History

புரட்சித்தலைவருக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு…சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மக்கள் திலகம் எம்ஜிஆர் வாரி வாரி வழங்கும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஆனால் அவரோ ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தார். படவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிய அந்தக் காலம் அவருக்கு சோகமயமானது.

அப்போதெல்லாம் அவருக்கு ஒரே ஆறுதல் அன்னையின் அன்பான வார்த்தைகள் தான். அந்தத் தருணத்தில் அவருக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்து என்று பார்ப்போம்.

சென்னை நகரில் சினிமா வாய்ப்பு தேடிக் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார் எம்ஜிஆர். அந்தக் கடினமான சூழலிலும் 18 வயதே ஆன எம்ஜிஆர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தான் நடப்பார்.

கதர் வேட்டி, கதர் ஜிப்பா, குதிகால் உயர்ந்த லாடம் அடித்த செருப்பு, நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, எவருக்கும் வணங்காத தலை இவை தான் எம்ஜிஆரின் அடையாளங்கள்.

MGR, Sakkarapani

கையில் ஓரணா கூட இருக்காது. பார்ப்பவர்களுக்கோ பெரிய இடத்துப்பிள்ளை என்று தான் எண்ணத் தோன்றும். அவரது தோற்றம் அப்படி இருக்கும்.

யாராவது தெரிந்தவர்கள் வந்தால் நடையின் மிடுக்கு மேலும் கூடும். எவரிடமும் பேச மாட்டார். யாரைக் கண்டாலும் தானாகக் கைகூப்பி வணங்கவும் மாட்டார். யாராவது சான்ஸ் வாங்கித் தர மாட்டார்களா என மனம் ஏங்கும். ஆனால் யாரிடமும் வாய் திறந்து உதவி கேட்க மாட்டார். அவர்களாக உதவட்டுமே என்பது போல நடந்து கொள்வார்.

ஆனால் அவர் எப்படி நினைத்தாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை. நடையாய் நடந்தார். வாத்தியார் கந்தசாமியும் பல கம்பெனிகளில் எம்ஜிஆருக்காக சிபாரிசு செய்தார்.

அப்படி செய்ததன் மூலம் 1935ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்ஜிஆருக்கு இன்ஸ்பெக்டர் வேடம் ஒன்று கிடைத்தது. புரட்சித்தலைவருக்கு இதுதான் முதல் படம். 1936ல் வெளியானது. என்.எஸ்.கிருஷ்ணனும் இந்தப் படத்தில் தான் அறிமுகம்.

சக்கரபாணிக்கும் ஒரு வேடம் கிடைத்தது. முதன் முதலாக எம்ஜிஆருக்குக் கிடைத்த சம்பளம் ரூ.100.

Sathileelavathi MGR

அடுத்த படத்திலும் அதே இன்ஸ்பெக்டர் வேடம் வந்தது. அப்போது பணம் மிகவும் தேவைப்பட்ட காலம். ஆனால்…இப்படியே போனால் எப்படி ஹீரோ ஆவது என்று எண்ணினார் எம்ஜிஆர். அதனால் அம்மாவிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

வரும் வழியில் நாடக நடிகர் கே.பி.கேசவனைப் பார்த்தார். பம்பாய் படத்தில் நடிக்க பம்பாய் போகிறேன். உனக்குத் துப்பறியும் நிபுணர் வேடம் வாங்கித் தருகிறேன் என்றார்.

அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் எம்ஜிஆர். வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னார். மறுநாள் எம்ஜிஆரை மகிழ்ச்சியுடன் பம்பாய் அனுப்பினார் அன்னை.

பம்பாய் சென்றதும் எம்ஜிஆருக்கு வசதியான ஒரு பங்களாவில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 2 மாதங்கள் அங்கு தங்கியிருந்தார். திடீரென வேடம் மாற்றப்பட்டு ஜமீன்தார் வேடம் அளிப்பதாகக் கூறினர். இதுவாவது கிடைத்ததே என நினைத்தார்.

MGR3

அதற்கும் ஆபத்து வந்தது. முக்கியமான ஜமீன்தார் வேடத்திற்கு டி.எஸ்.பாலையாவைப் போடுவது என்றும், முக்கியமில்லாத ஜமீன்தாருக்கு எம்ஜிஆரைப் போடுவது என்றும் முடிவு செய்தனர். பாலையாவும் பம்பாய் வந்து விட்டார்.

எம்ஜிஆருக்கு கொடுக்க உள்ள வேடம் தான் தனக்கு என மனம் வருந்தினார் பாலையா. அவரும் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்த முன்னாள் நாடக நடிகர் தான். அவருக்கும் அட்வான்ஸ் பணம் அவசரமாகத் தேவைப்பட்டது.

ஆனாலும் அவர் எம்ஜிஆருக்கு அளித்த வேடத்தைப் பறித்து எனக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏன்னா பணம் ரொம்ப அவரசத் தேவை. அதே நேரம் அவரால் அந்த இடத்தில் எதுவும் சொல்ல முடியவில்லை.

அவர் நிலைமை அப்படி இருக்க…எம்ஜிஆர் நிலைமையோ அதை விட மோசமாக இருந்தது. கடைசியில் அந்தப் படத்தில் நடிக்காமலேயே திரும்பினார் எம்ஜிஆர். இப்படியே பல நாள்கள் சோகமயமாகவே கழிந்தன.

google news
Continue Reading

More in Cinema History

To Top