அட எம்புரானே… 4வது நாள் வசூல் இத்தனை கோடியா? அடி தூள்..!

lucifer 2 empuran
Lucifer 2 Empuran: லூசிபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் சமீபத்தில் வெளியானது. மோகன்லால், பிருத்விராஜ், டோவினோ தாமஸ், மஞ்சுவாரியர், சச்சின் கெடேகர், அபிமன்யு சிங், ஜெரோம் ஃபிளின், எரிக் எபோனே, சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாள சினிமா உலகில் முதல் 2 நாள்களில் 50 கோடியைத் தட்டித் தூக்கி பெரும் புரட்சியை செய்த படம் லூசிபர் 2 எம்புரான். இந்தப் படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன. சிலர் கலவையான விமர்சனங்களைத் தந்தனர்.
லூசிபர் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே 2ம் பாகமும் வந்துள்ளது. கேரள முதல்வர் இறப்பிற்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவது யார்? மிகப்பெரிய போதை கும்பலைக் கொண்டு வர விவேக் ஓபராய் முயற்சி செய்கிறார். இதை அறிந்து களத்தில் இறங்குகிறார் ஸ்டீபன் நெடும்பள்ளி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோகன்லால் செயல்படுகிறார்.
அவர் இறந்த முதல்வரது மகன் டொவினோ தாமஸிடம் ஆட்சியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து டொவினோ தாமஸ்சும் நல்லாட்சியைத் தரவில்லை. அவர் ஊழலில் சிக்கி தனது தவறுகளை மறைக்க மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி போடுகிறார். சர்வதேச போதைக் கும்பலும் வருகிறது. இதை அறிந்த மோகன்லால் என்ன செய்து இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை அடக்குகிறார் என்பதுதான் கதை.
இந்திய அளவில் படத்தின் 4 நாள் வசூல் விவரம் வருமாறு.
முதல் நாளில் 21 கோடி, 2வது நாளில் 11.1கோடி, 3வது நாளில் 13.25கோடி, 4வது நாளில் முன்கூட்டியே எடுத்த கணக்கெடுப்பின்படி வசூல் 14 கோடி என வசூலித்துள்ளது. ஆக மொத்தம் 4நாள் வசூல் 59.35கோடி. அதே போல உலகளவில் 3நாள்களில் 140 கோடியை வசூலித்துள்ளது. அதே நேரம் முதல் நாளில் 22 கோடி எனவும் சேக்நில்க் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் முன்பதிவின் மூலம் கூறிய தகவல்படி 80கோடி வரை இந்திய அளவில் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.