Empuran:ஆரம்பத்துல ஜெட் வேகத்தில் போன எம்புரான்… அந்த விஷயத்துக்குப் பிறகு சீட்டு கட்டு மாதிரி சரிஞ்சிடுச்சே..!

by sankaran v |   ( Updated:2025-04-02 03:00:22  )
empuran
X

empuran

லூசிபர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் எம்புரான் என்ற பெயரில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கினார். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் 2 நாள்களிலேயே 100கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த சாதனையை மலையாளத் திரை உலகில் பெற்ற முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு படத்தில் சில சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் 17இடங்களில் கட் பண்ணியது. இது படத்துக்கு வலு சேர்க்கும் பார்த்தால் அதற்கு எதிர்மறையாகிப் போனது. படத்தின் கதை ஆடியன்ஸ் பார்க்கும்போது கனெக்டாகவில்லை.

இதனால் படத்தின் வசூல் அப்படியே சீட்டக்கட்டு மாதிரி சரிந்து போனது. முதல் 3 நாள்களில் 150 கோடியை வசூலித்த படம், 6வது நாளில் வெறும் ரூ.7.8 கோடி மட்டும்; வசூல் செய்தது என சேக்நில்க் நிறுவனம் அறிவித்தது. இது படத் தயாரிப்புக் குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாள்களில் எப்படி போகும் என்று எதிர்பார்ப்பில் உள்ளது.

empuranஇஸ்லாமிய கர்ப்பிணி பெண்களை வதைப்படுத்துவது போன்ற காட்சிகள் பெரிய சர்ச்சையை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. அதே போல படத்தில் சிறுவர்களையும் பஜ்ரங்கி குரூப் கொடூரமான முறையில் கொலை செய்கிறதாம். சிறுவன் வளர்ந்து பின்னர் மதவாத கும்பலின் தலைவனை கொலை செய்வது இதெல்லாம் பார்க்க முடியவில்லையாம்.

இதனால்தான் படத்தில் இருந்து 17 காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது இல்லாமல் படம் பார்க்கும்போது காட்சியில் எந்த ஒரு கனெக்ஷனும் இல்லாமலே போய்விட்டதாம். அதனால்தான் படத்தின் வசூல் கணிசமாக குறைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story