எம்புரானைத் தெறிக்க விட்ட வீரதீர சூரன்! முதல்நாள் வசூல் எவ்ளோன்னு பாருங்க..!

by sankaran v |   ( Updated:2025-03-28 00:53:25  )
empuran vs veeratheera sooran
X

empuran vs veeratheera sooran

பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு விக்ரமுக்கு பெரிய அளவில் எந்த ஹிட்டும் வரவில்லை. விக்ரம் நடித்து வெளியான வீரதீர சூரன் 2 படம் அவருக்கு ஒரு கம்பேக்கைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இயக்கியவர் எஸ்.யு.அருண்குமார். இவர் சித்தா படத்தை இயக்கி வெற்றி கண்டவர்.

ஒரே நாள் இரவில் நடக்கும் பரபரப்பான கதை. இதுல கேங்ஸ்டராக விக்ரம் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக தெறிக்க விடுகிறார். படம் ஆரம்பம் பரபரப்பாகச் செல்வதால் ரசிகர்கள் சீட்டின் நுனியில் இருந்து விடுகிறார்கள். யூகிக்க முடியாத திரைக்கதை படத்தின் பிளஸ். பிளாஷ்பேக் காட்சிகள்தான் படத்தின் மைனஸ்.

veeratheerasooranகிளைமாக்ஸ் காட்சியும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் விக்ரம் பாடலை வைத்து அதை சமாளித்துள்ளார் இயக்குனர். படத்தில் விக்ரமின் முந்தைய சூப்பர்ஹிட் படங்களான தூள், சாமியில் பார்த்த விக்ரம் நமக்கு மன நிறைவைத் தந்துள்ளார். துஷாரா விஜயன் சிறப்பாக நடித்துள்ளார்.

படம் நேற்று பொருளாதார சிக்கல் காரணமாக லேட்டாக ரிலீஸ் ஆனது. மதியத்திற்கு மேல் தான் ரிலீஸ் ஆனது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பிக்கப் ஆனது. படம் ஹவுஸ்புல்.

தமிழகம் முழுவதும் 370 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. முதல்நாளில் தமிழகத்தின் வசூல் மட்டும் ரூ.2 கோடியே 4 லட்சம். அதே சமயம் மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம் எம்புரான். இது தமிழகத்தில் 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. 1 கோடியே 94 லட்சம் வசூல். அந்த வகையில் பார்த்தால் 2 காட்சிகளே ஓடிய வீரதீர சூரன் படம்தான் வசூலில் டாப்பாக உள்ளது. இந்திய அளவில் படத்தின் வசூல் 3.25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story