இந்த மாதிரி பேச எவனுக்கும் உரிமையில்லை!.. விஷாலை விளாசிய தயாரிப்பாளர்கள்!..

மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், சந்தோசத்தில் மிதக்கும் நடிகர் விஷால் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் எண்ணம் கொண்டிருந்தால் யாரும் இரண்டு ஆண்டுகளுக்கு சினிமா பக்கமே வராதீங்க என பேசியிருந்தார். விஷாலின் அந்த பேச்சுக்கு தற்போது லோ பட்ஜெட் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் கார்த்தி கண்டனம் தெரிவித்து பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் விஷால் பெரிய பட்ஜெட்டில் கடந்த சில வருடங்களாக பல படங்களில் நடித்தும் எந்த ஒரு படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அரை டஜன் தோல்வி படங்களுக்குப் பிறகு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் எஸ் ஜே சூர்யா நடித்த நிலையில் வெற்றி படமாக மாறியது.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

இந்நிலையில், நடிகர் விஷால் 4 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு படம் தயாரிக்கும் எண்ணம் இருந்தால் அது அப்படியே விட்டு விடுங்க, அந்த பணத்தை டெபாசிட் செய்து குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செலவிடுங்கள், நிலம் வாங்குவது என்றால் வாங்கி போட்டுக் கொள்ளுங்கள் என பேசியது பல சிறு பட தயாரிப்பாளர்களை மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வட்டிக்கு கடன் வாங்கியாவது தங்களது கலைப்படைப்பை உலகம் காண உருவாக்கி வரும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வெற்றி அடையவே மாட்டார்கள் என்கிற நோக்கில் விஷால் பேசியது சரியே கிடையாது என வெளுத்து வாங்கியுள்ளார் “ எனக்கு எண்டே கிடையாது” படத்தின் தயாரிப்பாளர் கார்த்தி.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை இதுதான்! போஸ்டரின் மூலம் மிரட்டிய பாலா – வைரமாவாரா அருண்விஜய்?

சினிமா என்பது கடல்.. அதில் பெரிய போட் எடுத்து செல்பவர்கள் நிறைய மீன்களை பிடிப்பார்கள். சின்ன போட் எடுத்துக்கொண்டு செல்பவர்கள் அதற்குத் தகுந்த மீன்களை பிடிப்பார்கள். கடலுக்கு வரக்கூடாதுன்னு சொல்வதற்கு எவனுக்கும் உரிமை கிடையாது என நடிகர் விஷாலை வெளுத்து வாங்கி விட்டார்.

தயாரிப்பாளரை தொடர்ந்து எனக்கு எண்டே கிடையாது படத்தின் இயக்குனர் விக்ரம் பேசும்போது, விஷால் அப்படி பேசியது எங்களைப் போன்ற சிறு பட்ஜெட் படங்களை உருவாக்குபவர்களுக்கு மிகப்பெரிய வலியையும் வேதனையும் கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story