ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே எண்டு கார்டா? ஹீரோ விலகியதால் சீரியலை இழுத்து மூடிய சேனல்...!
மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் டிவி பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. உதாரணமாக ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள்.
இப்படி உள்ள நிலையில் தான் புதிதாக வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியல் தொடங்கப்பட்டது. இதில் பிரஜன் மற்றும் சரண்யா லீடு ரோலில் நடித்து வந்தனர். சீரியல் தொடங்கி சில நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென பட வாய்ப்புகள் கிடைத்ததால் ஹீரோ பிரஜன் சீரியலில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அவருக்கு பதில் நடிகர் முன்னா நாயகனாக நடிக்க தொடங்கினார். வெறும் நான்கு நாட்கள் மட்டுமே சீரியல் ஓடிய நிலையில், தற்போது சீரியலையே இழுத்து மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக பிரஜன் சரண்யா இணைந்து நடித்தபோதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு ஹிட்டாகவில்லை. இந்நிலையில் பிரஜனும் சீரியலில் இருந்து விலகி விட்டதால் சீரியலின் டிஆர்பி மிகவும் குறைந்து விட்டதாம். ரேட்டிங்கில் மிகவும் பின்தங்கி இருப்பதால் தான் சீரியலை இழுத்து மூட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து நடிகர் முன்னா குறிப்பிட்டுள்ளதாவது, "நடப்பவை எல்லாம் நன்மைக்கே" என்ற கேப்ஷனோடு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக சில வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் சீரியல் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.