காமப்பார்வையால இருக்கு!.. கருப்பு சேலையில் கதிகலங்கவிடும் கீர்த்தி சுரேஷ்!.. இந்தியை ஆதரிக்க ரெடி!..
மலையாளத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவை அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார்.
கோலிவுட் படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் படு கவர்ச்சியாக பேபி ஜான் படத்தில் நடித்துள்ளதாகவும் புரோமோஷன் நிகழ்வுகளுக்கும் தாராள உடை அணிந்து சென்று வருவதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.
ஓவியாவுக்கு பிறகு இந்திய அளவில் ட்விட்டரில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சேலை புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டாகி உள்ளார். உடல் எடையை கணிசமாக குறைத்து செம பிட்டாக உள்ள கீர்த்தி சுரேஷ் ஓவர் கிளாமரில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
வரும் டிசம்பர் மாதம் எந்த புயல் தாக்கப் போகிறது என்று தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ் புயல் பாலிவுட் ரசிகர்களை தாக்கப் போவது உறுதியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா இந்தியில் கடந்த ஆண்டு அறிமுகமானார்.
அட்லி தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் காலிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எமி ஜாக்சன் நடித்த டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை வாமிகா கபி நடித்து வருவதாகவும் கூறுகின்றனர். இயக்குனர் மகேந்திரன் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது மிரட்டலான அறிமுகம் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.