ஸ்பெயினில் சின்ன பையனோட திரிஷா!.. வைரலாகும் போட்டோஸ்!.. அதுக்குத்தான் போயிருக்காரா?..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:35  )

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகை திரிஷா. கடந்த ஆண்டு விஜய் நடித்த லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷா இந்த ஆண்டு மீண்டும் விஜய் நடித்த கோட் படத்தில் மட்டப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

விஜயுடன் இணைந்து நடித்த திரிஷாவுக்கு அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெளியாக தாமதமான நிலையில், அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகை திரிஷா மலைப்பிரதேசத்தில் சிறுவன் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கோட் படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் கேக் கட் பண்ணி கொண்டாடிய வீடியோ வெளியானது. படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட யாருமே பங்கேற்கவில்லை.

நடிகை திரிஷா அர்ச்சனா கல்பாத்தி உடன் இணைந்து வெளிநாட்டுக்கு டூர் சென்றதாகவும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் இரண்டு படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், இரண்டு படங்களிலும் திரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டும் அவருக்கு தொடர்ந்து வெற்றி ஆண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை கீர்த்தி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் அடுத்ததாக திரிஷாவும் தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவரது ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Next Story