அவ ஷேப்பு அடடடடா!.. ஆளே மாறிய கீர்த்தி சுரேஷ்!.. தெறி பேபியின் தெறிக்கவிடும் போட்டோஸ்!..
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பெண்களை மையப்படுத்திய படங்களில் ஹீரோக்கள் இல்லாமல் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
ஆனால் அந்த படங்கள் புதிதாக அவருக்கு கை கொடுப்பதில்லை. இந்த ஆண்டு வெளியான ரகு தாத்தா திரைப்படமும் தியேட்டரில் பலத்த அடி வாங்கியது.
பல வருடங்களாக பாலிவுட் ஹீரோயினாக மாற வேண்டும் என்கிற கனவுடன் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்தப் படம் திரைக்கு வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் பேபி ஜான் படத்தின் நடித்துள்ளதாக உன் தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. கீர்த்தி சுரேஷ்க்கு ஹிந்தியில் மிகப்பெரிய அறிமுகமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கிடைத்த நிலையில், அட்லி தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் இயக்கியுள்ள பேபி ஜான் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது செம ஃபிட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.