விஜயதசமி அதுவுமா நயன்தாரா மகன்கள் என்ன பண்றாங்கன்னு பாருங்க!.. வைரலாகும் செம வீடியோ!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:02  )

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குடும்பத்துடன் விஜயதசமி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

நடிகைகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடித்து வருகிறார். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை. விரைவில் அவர் நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐசி திரைப்படம் எப்போது என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கு முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரி முத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படம் வெளியாகி விடுமோ என்றும் கூறுகின்றனர்.

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு பூஜை போட்ட நடிகை நயன்தாரா தனது மகன்கள் இருவரையும் வைத்து வீட்டில் வேலை செய்பவர்கள், வாட்ச்மேன் உள்ளிட்டவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா அடுத்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நயன்தாரா இதுவரை கமிட் ஆகவில்லை.

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story