தளபதி 69 நாயகியின் ஸ்கூட்டரின் பேக் சீட்டில் யாரு உட்கார்ந்து இருக்காருன்னு பாருங்க!.. லக்குதான்!..
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கழித்து அதிரடியாக என்ட்ரி கொடுத்தார்.
பூஜாவின் அழகை பார்த்து வியந்த ரசிகர்கள் ஹலோமித்தி அபிபோ பாடலை வேற லெவலில் வைரல் ஆக்கினர். ஆனால் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. பூஜா எங்கே நடித்த பெரிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
பிரபாஸின் ராதே ஷ்யாம், ராம்சரனின் ஆச்சார்யா, விஜயின் பீஸ்ட், சல்மான்கானின் கிசி கா பாய் கிஸி கி ஜான் என வரிசையாக பூஜா ஹெக்டே நடித்த படங்கள் பிளாப் ஆகி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக அவருக்கு எந்த ஒரு புதிய படங்களும் கிடைக்காமல் இருந்தன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44-வது படத்தில் பூஜா ஹெக்டேவை ஹீரோயின் ஆக்கிய நிலையில், அதே நடிகை தான் வேண்டும் என தற்போது தளபதி 69 படத்திற்கும் அடம் பிடித்து சேர்த்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பிறந்தநாளான இன்று இந்திய சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் பச்சனின் தனது ஸ்கூட்டர் பேக் சீட்டில் உட்கார வைத்து ஓட்டுவது போன்று எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் சத்யதேவ் எனும் கம்பீரமான கதாபாத்திரத்தில் அமிதாபச்சன் நடித்துள்ள நிலையில் அவருக்கு லைக்கா நிறுவனம் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. வேட்டையன் திரைப்படமும் அந்த வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.