Entertainment News
செம தூக்கலா இருக்கு!.. அரை பனியனில் அழகை காட்டும் ரேஷ்மா!..
Reshma pasupuleti: ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரேஷ்மா. அங்கு டிவி தொகுப்பாளினி, மாடல் அழகி, விமான பணிப்பெண் என பல துறைகளில் இருந்தார். திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகி அங்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகனுடன் சென்னை வந்து செட்டில் ஆனார்.

சினிமாவில் வாய்ப்பு தேடினார். நினைத்தபடி ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தாலும் இப்போது அதிகம் பேரால் பார்க்கப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவரை பெண்களிடம் அதிகம் பிரபலப்படுத்தி இருக்கிறது. ஒருபக்கம், வேறு சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரையில் சிறந்த வில்லிக்கான விருதையும் வாங்கி இருக்கிறார். தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான பாபி சிம்ஹாவின் சகோதரி இவர்.

சீரியலில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இந்த படத்தில் அவசரத்தில் இவர் கழுத்தில் தாலி கட்டி விட்டு சூரி அவரை பிரிந்து செல்ல படாத படும் காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

ஒருபக்கம், அரைகுறை உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில், அரை பனியனை போட்டு அழகை காட்டி அசத்தி இருக்கிறார்.
