சசிக்குமாரை வைத்து நந்தன் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் இரா சரவணன். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். நந்தன் படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கொடி ஏற்றலாம் என்கிற சட்டத்தையும் கொண்டு வந்தார்.இரா சரவணன் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருக்கமானவர்..
இந்நிலையில்தான், இரா சரவணன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். நண்பரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டேன். மாப்பிள்ளை வீட்டை ஒப்பிடும்போது நண்பர் அவ்வளவு வசதியானவர் இல்லை.. மாப்பிள்ளை வீட்டாருக்கு அது பெரும் குறையாக இருந்தது.. தங்களை ஏமாற்றி பெண் வீட்டார் திருமணம் செய்கிறார்கள் என அவர்கள் நினைத்தார்கல். இதனால் பெண் வீட்டார் சங்கடத்தில் இருந்தார்கள்.
அப்போது வேறு ஒரு காரணத்துக்காக தம்பி சிவக்கார்த்திகேயன் எனக்கு போன் செய்தார். அவர் கேட்ட தகவலை சொல்லிவிட்டு கூடவே இப்போதும் பெண்களை வரதட்சணையை வைத்து மதிப்படுகிறார்கள் என அவரிடம் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டேன்.. மணப்பெண்ணின் பெயர் என்ன என கேட்டார் சிவகார்த்திகேயன்.
சில நிமிடங்களில் என் செல்போனுக்கு சிவகார்த்திகேயன் ஒரு வீடியோவை அனுப்பியிருந்தார்.. அதில் மண்மகளின் பெயரை சொல்லி ‘அன்பு தங்கைக்கு நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன்.. உங்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.. உங்க ஊர் பக்கம் வரும்போது கண்டிப்பாக உங்களை வந்து சந்திக்கிறேன்’ என அதில் பேசியிருந்தார். அதைப்பார்த்து நான் சிலிர்த்துப் போனேன்.
உடனே மணமகளின் தந்தைக்கு அந்த வீடியோவை அனுப்பினேன். அதை அவர் அவரின் மகளுக்கு காட்ட அடுத்த சில நிமிடங்களில் மணமகன் வீட்டார் அனைவருக்கும் இந்த வீடியோ பரவியது.. சில நிமிடங்களில் அங்கிருந்த சூழ்நிலையே மாறிப்போனது. ‘சிவகார்த்திகேயனே வாழ்த்து சொல்லியிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய விஷயம்’ என மணமகன் வீட்டார் மணப்பெண்ணை கொண்டாடத் துவங்கி விட்டனர்..
இதில் தம்பி சிவகார்த்திகேயன் யோசித்த விதம்தான் முக்கியமானது.. நான் அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.. ஆனால் சமயோசிதமாக ஒரு வீடியோவை அனுப்பினார். அவர் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும், அக்கறையையும் பார்த்து நான் வியந்து போகிறேன். தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால் அதை முயற்சி செய்து பார்ப்பவர் அவர்.. படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் அவர் நம்ம வீட்டு பிள்ளைதான்’ என பதிவிட்டிருக்கிறார்..
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…