எதிர்நீச்சல்: புருஷனையே போட்டு கொடுத்த ஈஸ்வரி… ஜனனியிடம் வாங்கி கட்டிகொள்ளும் ஷக்தி…

by amutha raja |
ethirneechal serial
X

Ethirneechal Serial: சன் டிவியில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்த மாரிமுத்து இறந்த பின் கதையை மற்ற கதாபாத்திரங்களின் பக்கம் நகர்த்தி செல்கிறார் இயக்குனர் திருச்செல்வம். மாரிமுத்துவிற்கு பின் அக்கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வேலராம மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவரும் அந்த சீரியலில் நிலைத்து நிற்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டுமே சீரியலில் தென்பட்ட வேல ராம மூர்த்தி பின் காணாமலே போய்விட்டார். அவருக்கு பதிலாக அவரது இரண்டு சகோதரர்களான கதிர் மற்றும் ஞானம் தற்போது அவரது வில்லதனமான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: ஸ்ருதி-ரவி கல்யாண ஜோடியாகிடுவாங்க… முத்து – மீனா வாழ்க்கைக்கு தான் ஆப்பு போல..!

மேலும் ஊரின் திருவிழாவில் ஜீவானந்தம்தான் தலைமை பொறுப்பெடுக்க உள்ளார். அந்த சமயத்தில் அவரையும் அப்பத்தாவையும் கொல்ல கதிர் ஏற்கனவே தனது அண்ணனுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார். அந்த திட்டத்தினை இந்த திருவிழாவில் நடத்தி முடிக்கும் எண்ணத்தில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் உள்ளனர். அதே சமயம் ஈஸ்வரி ஜீவானந்ததை சந்தித்து அந்த திருவிழாவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டாம் என கூறுகிறார்.

அதற்கு ஜீவானந்தம் மறுப்பு சொல்ல ஈஸ்வரியோ உங்களின் மனைவி சாவதற்கு காரணமே என் கணவரும் கதிரும்தான் என கூறுகிறார். அதை கேட்ட ஜீவானந்தம் அதிர்ச்சியில் உறைகிறார். இது ஒரு புறமிருக்க ஜனனியிடம் ஷக்தி தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இவ்வளவு பிரச்சினைகள் வருகிறதே என கூற கடுப்பான ஜனனி அதுக்காக பாதியிலேயே விட சொல்றியா ஷக்தி என அவரை திட்டுகிறாள்.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: பில்லு கட்ட காசு இல்ல.. இதுல ஜுவல்லா?… கோபி சார் நீங்க காலி தான் போலயே..!

ஷக்தியே நாடகத்தில் எப்போதாவதுதான் வாயை திறக்கிறார். ஆனால் திறந்தும் வாங்கி கட்டி கொள்வது ரசிகர்களுக்கு வேடிக்கையாக உள்ளது. இவ்வாறாக இன்றைய எபிசோடின் புரோமோ அமைந்தது. எது எப்படியோ ஆதி குணாசேகரன் இல்லாமல் இவங்க அக்கப்போரு தாங்கல…

Next Story