டீசர்-னு சொல்லிட்டு முழு படத்தையும் போட்டு காட்டுறீங்க.?! அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.!

by Manikandan |
டீசர்-னு சொல்லிட்டு முழு படத்தையும் போட்டு காட்டுறீங்க.?! அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.!
X

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது ரிலீஸ்க்கு ரெடியாகி உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பிப்ரவரி 4 என அறிவிக்கப்பட்ட ரிலீஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதை ஒட்டி, படத்தின் டீசரை படக்குழு வெளியிட உள்ளதை சமீபத்தில் அறிவித்தது. அது போல, இப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

வழக்கமாக டீசர் என்றால் அதில் பல விஷயங்கள் காட்டப்படாது. சஸ்பென்ஸ் கொண்டு காணப்படும். ஆனால், இப்பட டீசரில் அனைத்து விஷயங்களும் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய காட்சிகளும் காட்டப்பட்டு விட்டது போல தெரிகிறது.

இதையும் படியுங்களேன் - விஜயின் வேண்டுகோள்.! கண்டுகொள்ளுமா தயாரிப்பு நிறுவனம்.!

படத்தின் ஹீரோ சூர்யாவின் தங்கை வில்லன்களால் தாக்கப்படுகிறார் விபத்து நடைபெறுகிறது. வில்லன் வினய் அரசியல் பொறுப்பில் இருக்கிறார். அதற்கு சூர்யா பழிவாங்குகிறார். இதுவே படத்தின் கதை என டீசரில் வரும் ஒவ்வொரு காட்சியும் விளக்கி சொல்லிவிட்டது.

இதையும் தாண்டி படத்தில் என்ன செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்த போகிறார்கள் என மார்ச் 10 வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story