சீரியல் முடிஞ்ச கையோடு ‘வானத்தை போல’ குடும்பத்தில் இணைந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்.. சூப்பரு
EthirNeechal: சன் டிவியில் நாள்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அதற்கு காரணம் இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. அவருக்காகவே ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த சீரியலின் பக்கம் திரும்பினார்கள்.
அந்த அளவுக்கு யதார்த்தமாகவும் கிராமத்து வசனங்களின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மாரிமுத்து. ஆனால் திடீர் நெஞ்சு வலி காரணமாக அவர் இறந்துவிட அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி இணைந்தார். ஆரம்பத்தில் மாரிமுத்து இருந்த இடத்தில் ராமமூர்த்தியை பார்க்க மக்கள் விரும்பவில்லை.
இதையும் படிங்க: ஃப்ளைட், கப்பல்னு சொகுசு வாழ்க்கை.. அப்போதைய நடிகைகளில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை
பல விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அதுவே பழகிப் போய்விடும் என்பதற்கு இணங்க கடைசி வரை குணசேகரன் ஆகவே வேலராமமூர்த்தி அவருடைய பாணியில் நடித்தார். சமீபத்தில் தான் இந்த சீரியல் முற்றுப்பெற்றது .இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஒரு பிரபலம் வானத்தைப்போல சீரியலில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவியில் நாள்தோறும் இரவு 8:30 மணியளவில் ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தைப்போல. டி ஆர் பியில் எப்போதுமே ஒரு தனி இடத்தில் இருப்பது வானத்தைப்போல சீரியல். அதிலும் பல மாற்றங்கள் இப்போது செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு என பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினிக்கு மகளாக நடித்திருக்கும் தாரா இப்போது வானத்தைப்போல சீரியலில் இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்!.. சூர்யாவை பங்கம் செய்த புளூசட்டை மாறன்!.. அதுக்குன்னு இப்படியா!..
அது மட்டும் அல்லாமல் சீரியல் நடிகை அனுஷாவும் புதியதாக வானத்தைப்போல சீரியலில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாயகி சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த அனுஷா. இப்படி வானத்தைப்போல சீரியல் பல வகைகளில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஒரு புதிய அவதாரம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. போகப் போக இந்த சீரியலின் விறுவிறுப்பும் எந்த அளவு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.