பேர கேட்டதும் ‘அரோகரா’ என கேலி செய்த கும்பல்.. அப்ப கூட ரஜினி அதை மாத்தவே இல்லையாம்!..

by prabhanjani |
rajinikanth
X

ரஜினியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர். சிவாஜி ராவ் ஆக இருந்தவர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தாக மாறி, 73 வயதில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாலசந்தர் தான்.

இந்நிலையில், அண்ணாமலை படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், கே.பாலசந்தர் எது சொன்னாலும் ரஜினி தட்டாமல் கேட்பார். அப்படி தான் ஒருமுறை ரஜினியை பாலசந்தர் அழைத்து, வசந்த் இயக்கும் படத்தில் நடிக்குமாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க- அண்ணாமலை படத்தில் அந்த சீனே இல்ல ; சரத்பாபு ஐடியாதான் அது: இயக்குனர் சொன்ன ரகசியம்

ரஜினியும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை. ரஜினி வேறு மாதிரியான கதை கேட்டுள்ளார். பின்னர் வசந்த் விலகிவிட்டார். அதற்கு பதில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து படம் இயக்க, பாலசந்தர் முடிவெடுத்துள்ளார். இது குறித்து ரஜினியிடம் கூறிவிட்டு, அந்த படத்திற்கான டைட்டிலை நீயே சொல் என்று இயக்குநர் பாலசந்தர் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில், ரஜினி தான் தன்னுடைய பல படங்களுக்கு பெயரை முடிவு செய்வார். பெரும்பாலும் அவர் வைக்கும் பெயர்கள் நன்றாக தான் இருக்கும். அதேபோல, பாலசந்தர் கேட்டுள்ளார். ரஜினி சற்று நேரம் யோசித்துவிட்டு, அண்ணாமலை என்று கூறியுள்ளார். இதை கேட்டு, அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர்.

மேலும் ஒருசிலர் அவர் இருக்கும்போதே, அண்ணாமலைக்கு அரோகரா என்று கூறி கேலி செய்துள்ளனர். ஆனாலும் ரஜினி இது தான் படத்தின் டைட்டில் என்று உறுதியாக இருந்துள்ளார். பிறகு தான் அண்ணாமலை படம் எடுக்கப்பட்டது.

யார் என்ன சொன்னாலும், அண்ணாமலை தான் டைட்டில் என்று ரஜினி உறுதியாக இருந்தார். ஆதே போல அந்த பெயர் நன்றாக, படத்திற்கு பொருத்தமாக தான் இருந்தது. படமும் வெற்றி பெற்றது என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்

Next Story