யுவன் சங்கர் ராஜாவுக்கு நா. முத்துகுமார் பாடல் வரிகளில் பல சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் அமைந்தன. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என வரிசையாக ஹிட் ஆல்பங்களே வெளியாகின. ஆனால், நா. முத்துகுமாரின் மறைவுக்குப் பிறகு அத்தகைய காதல் பாடல்கள் தமிழ் சினிமாவில் அரிதாக மாறிவிட்டன.
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிள் “மறுபடி நீ”காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது.
இதையும் படிங்க: டிரெய்லர்னு சொல்லிட்டு ஒரே அனுபமாவோட பிட்டு படமா இருக்கே!.. டில்லு ஸ்கொயர் வேறலெவல் மஜா தான்!..
இந்த பாடலை மதன் கார்கி எழுதி உள்ளார். வைரமுத்துவ்ன் பாடல் வரிகளை சமீப காலமாக மிஸ் ஆகுதே என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவரது மகன் தரமான வார்த்தைகளை இந்த பாடலில் கவிதையாகவே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.
சீதாராமம் படத்தில் பாடல் வரிகள் கவனிக்க வைத்தன. அதன் பின்னர் நிச்சயம் ஏழு கடல் ஏழு மலை படத்தின் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே கற்றது தமிழ் படத்தின் காலத்திற்கே கொண்டு சென்று விடும் என தெரிகிறது.
இதையும் படிங்க: சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..
அதிலும், கூடுதல் சிறப்பாக இந்த பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். அடேங்கப்பா என்னவொரு குரல் என அப்படியே ரிப்பீட் மோடில் கேட்கத் தூண்டும் அளவுக்கு இந்த பாடல் உள்ளது. இந்த படத்திற்காவது நிச்சயம் யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். காதலர் தினத்தை இந்த பாடலுடன் நிறைவு செய்யலாம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…