வடிவேலுவுடன் ஃபகத் இணையும் படத்தின் கதை இதுதான்… இதில் வைகைப்புயல் ஜோடி யார் தெரியுமா?
Vadivelu: தமிழ் சினிமாவில் வளர்ந்து உச்ச நட்சத்திரமாக இருந்த வடிவேலு அவர் வாயாலே கீழே எறியப்பட்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகளே இல்லை. பல வருடம் கழித்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அந்த படம் சரியாக போகவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடித்து இருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் ஹீரோ வடிவேலு என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மீது வந்த கோபத்தில் அதிரடி முடிவெடுத்த சின்னப்ப தேவர்!.. உருவான சூப்பர் ஹிட் படம்...
காமெடி மட்டுமே செய்த வடிவேலுவுக்கு குணசித்திர வேடத்தில் நடிக்க தெரியும் என்பதை ரசிகர்களுக்கு உணர வைத்தது. மாமன்னன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. கேரியர் மீண்டும் உச்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வடிவேலு கால்ஷூட் மீண்டும் புக்காகி வருகிறது.
தற்போது, மாமன்னனில் வில்லனாக நடித்த ஃபகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸின் 98வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை மலையாள நடிகர் கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இப்படம் ஒரு ரோட் ட்ரிப் சம்மந்தப்பட்ட கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. தற்போது இயக்குனர் கூறும் போது, இப்படம் சாலையில் நடக்கும் கதை தான். நாகர்கோவில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இளைஞர் மற்றும் வயதானவர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: மீனாவை அக்காவா நினைச்சு தானே காசு கொடுத்தாங்க ஸ்ருதி… இதுக்கு ஏன்யா கத்துறீங்க..!