அஜித் பாலிசியை கையில் எடுத்த பகத் பாசில்! திடீர் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்.. என்னாச்சோ?
Actor Fahad Fasil: தமிழ் சினிமாவில் இப்போது சமீப காலமாக மலையாள சினிமாக்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒரு பக்கம் மலையாள நடிகர்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அவர்கள் நடித்த படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற வருகின்றன. மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் ரிலீசாகின்ற ஒவ்வொரு மலையாள படமும் நல்ல கதை களத்துடன் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் அதை கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார். அதுவும் ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். விக்ரம் படத்திற்கு பிறகு ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஒட்டுமொத்த கண்ணும் அவர் மீதுதான் திரும்பியது.
இதையும் படிங்க: நல்லவேளை கலர்ல போடல!.. தலைவி வேறலெவல்!.. பில்லா பட எபெஃக்ட் காட்டும் நயன்தாரா…
அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தி வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா என்று சொன்னாலும் நடிப்பு அசுரனாக பகத் பாஸில் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய ஒரு இணையதள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ‘ரசிகர்கள் படங்களை பார்த்துவிட்டு படத்தைப் பற்றிய விமர்சனத்தை திரையரங்குகளிலேயே பேசி முடித்து விடுங்கள். அல்லது படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் அதைப் பற்றி பேசி விடுங்கள்.
இதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது நடிகர்களை பற்றியோ அல்லது அவர்கள் நடித்த படங்களை பற்றியயோ பேச வேண்டாம். இதைத் தவிர தங்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட கடமைகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற நடிகர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சின்ன பையனுடன் ’அந்த’ தொடர்பில் இருந்த சில்க் ஸ்மிதா… கடைசியில் நடந்தது தான் அதிர்ச்சி…
இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவர் அஜித் ரசிகராக இருப்பாரோ என்று கிண்டலடித்தும் வருகின்றனர். ஏனெனில் அஜித்தும் இதே மாதிரியான ஒரு கொள்கையில் இருப்பவர். தன்னை யாரும் கொண்டாட வேண்டாம். தன்னைவிட தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என்றுதான் ஒரு அன்பான வேண்டுகோளை எப்போதுமே ரசிகர்களுக்கு அஜித் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போது பகத் பாஸிலின் இந்த பதிவும் அஜித் கொள்கையை ஒத்தே காணப்படுகிறது.