மேடம் ப்ளீஸ் இதெல்லாம் செய்யாதீங்க!.. சினேகா வீடியோ பார்த்து கதறும் ரசிகர்கள்...

41 வயதானாலும் இன்னமும் இளம் நடிகைகளுக்கு செம டஃப் கொடுக்கும் அளவுக்கு கவர்ச்சியாகவும் இளமையாகவும் இருந்து வரும் புன்னகை அரசி சினேகா திடீரென ஜிம்மில் ரொம்பவே ஹெவியான வெயிட்டை தூக்கி வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தனக்கு ஃபயர் விடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நடிகை சினேகாவுக்கு அவரது கமெண்ட் பக்கம் முழுக்கவே வெறும் அட்வைஸ் கமெண்ட்டுகளாகவும் பயமுறுத்தும் பதிவுகளாகவும் வந்து விழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஒரு செகண்ட்ல உயிரே போயிடுச்சு!.. ஐஸ்வர்யா ராஜேஷை அல்லு கிளம்ப வைத்த சம்பவம்!.. யாரு காரணம் தெரியுமா?..
ஹெவி வெயிட் தூக்கும் சினேகா:
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகளுடன் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகை சினேகா அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். கடைசியாக மம்மூட்டி நடித்த கிறிஸ்டோபர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த சினேகா மேலும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
40 வயதை கடந்தாலும் நடிகைகள் பலர் தங்களது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வொர்க்கவுட் செய்து வருகின்றனர். அப்படி நடிகை சினேகாவும் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தை போல சொகுசு கண்ட பூனையாக மாறிய சூர்யா!.. சுதா கொங்கரா, வெற்றிமாறன் நிலைமை அவ்ளோதான் போல!..
ஹார்ட் அட்டாக் வரும் என பயமுறுத்தும் ரசிகர்கள்:
அதை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தாவும் இப்படித்தான் 100 கிலோ வெயிட் தூக்குறேன், 150 கிலோ வெயிட் தூக்குறேன் என உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். புனித் ராஜ்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக இறப்பதற்கு காரணமே ஜிம்மில் ஹெவி வெயிட் தூக்கியது தான் சினேகாவை மறுபடியும் ஜிம் பக்கமே போக விடாமல் பயமுறுத்தி வருகின்றனர்.
மேடம் ப்ளீஸ், யோகா உள்ளிட்ட லைட்டான உடற்பயிற்சியை செய்யுங்கள், அதை விட்டுட்டு இப்படி ஹெவி வெயிட்டை தூக்கிடாதீங்க, உங்களுக்கு ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாது என சினேகாவுக்காக ரொம்பவே அக்கறையுடன் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்க: