ராயன் படத்துல வேறமாதிரி எஸ்.ஜே.சூர்யா!.. தனுஷ் வைத்திருக்கும் சர்ப்பரைஸ்!....
தமிழ் சினிமாவில் வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட்.
எஸ்.ஜே.சூர்யாவுக்குள் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் சென்னை வந்ததே நடிகர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இயக்குனராகி விட்டார். குஷி, வாலி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பின்னரும் அவர் மற்ற நடிகர்களை வைத்து படமெடுக்க போகவில்லை.
நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி அந்த படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. ஆனாலும், நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் அவருக்கு போகவில்லை. 2015ல் வெளியான இசை என்கிற படத்திற்கு பின் அவர் எந்த படமும் இயக்கவில்லை.
ஆனால், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதில், இறைவி, ஸ்பைடர், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களுக்கு பின் நடிப்பு ராட்சசன் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது.
இப்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களிலும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். அதேபோல், தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்திலும் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
வழக்கமாக எஸ்.ஜே.சூர்யா தான் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு வாய்ஸ் மாடுலேஷனில் கத்தி கத்தி பேசுவார். ரசிகர்களுக்கும் அதுதான் பிடிக்கும். ஆனால், ராயன் படத்தில் புதுவிதமான எஸ்.ஜே.சூர்யாவை காட்டி இருக்கிறாராம் தனுஷ். செட்டில் ஆக்டிங் என சொல்லப்படும் அலட்டிக்கொள்ளாத ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறாராம். எனவே, இந்த படத்தில் ஒரு புது எஸ்.ஜே.சூர்யாவை பார்க்கலாம் என்றே நம்பப்டுகிறது.