இவ்ளோ கஷ்டப்பட்டும் ரசிகர்களுக்கு பிடிக்காம போயிடுச்சே!.. கோட்-டில் கோட்டைவிட்ட வி.பி!..
Goat: சினிமாவை பொறுத்தவரை ஒரு புதிய முயற்சி கிளிக் ஆகுமா? ஆகாதா? என்பதை கணிக்கவே முடியாது. கமல் கூட பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்திருக்கிறார். அதில் சில படங்கள் கிளிக் ஆகவில்லை. ராஜபார்வை, குருதிப்புனல், உத்தமவில்லன், ஹேராம் ஆகியவற்றை சொல்லலாம்.
முன்பெல்லாம் ஹாலிவுட்டில் படங்களில் மட்டுமே கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தங்கள் படங்களில் தொடர்ந்து கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தினார்கள். எனவே, தமிழ் படங்களில் ஹாலிவுட் கலைஞர்களும் வேலை செய்ய துவங்கினார்கள்.
சமீபகாலமாகவே ஏஜிங், ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. இந்த தொழில்நுட்பங்களை ஹாலிவுட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏஜிங் மூலம் ஒரு நடிகரை வயதானவராகவும் காட்ட முடியும், மிகவும் இளமையாகவும் காட்ட முடியும். 50 வயது நபர் 17 வயதில் எப்படி இருப்பர் எனவும் காட்ட முடியும்.
ஏஐ மூலம் இல்லாத ஒருவரை திரையில் கொண்டு வர முடியும். கோட் படத்தில் இந்த 2 தொழில்நுட்பங்களையுமே வெங்கட்பிரபு பயன்படுத்தியிருக்கிறார். சிறு வயது விஜயை பல காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், படம் பார்த்த பலரும் விஜயை இளமையாக காட்டியிருப்பது செட் ஆகவில்லை. பார்க்க நன்றாகவே இல்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என சொல்லி வருகிறார்கள்.
விஜயை ஏஜிங் தொழில்நுட்பத்தில் காட்டியிருப்பது படத்திற்கே பெரிய மைனஸாக இருப்பதாக சொல்கிறார்கள். அமெரிக்காவெல்லாம் போய் இது தொடர்பான வேலைகளை செய்தார் வெங்கட்பிரபு. ஆனாலும் அது ரசிகர்களை கவராமல் போய்விட்டது. தமிழ் சினிமாவில் ஏஜிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி முதன் முதலாக அதிக காட்சிகள் கொண்ட படமாக கோட் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வந்தது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஏற்கனவே பல வருடங்களாகவே ஹாலிவுட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த டைம் லூப் என்கிற விஷயத்தை வைத்து மாநாடு என்கிற படத்தை எடுத்து ரசிக்கவைத்தார் வெங்கட்பிரபு. இது வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதையும் படிங்க: ஒன்னு கூடிட்டாய்ங்ப்பா!. குடும்பத்துடன் கோட் படம் பார்த்த விஜய்?!.. ஆச்சர்ய தகவல்!…