ராரா பாட்டை இதுலயும் வச்சிருக்கலாம்!.. சந்திரமுகி 2- பார்த்த ரசிகர்கள் சொல்வது இதுதான்!.. டிவிட்டர் விமர்சனம்….

Published on: September 28, 2023
chandramukhi
---Advertisement---

chandramukhi 2 review: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. ஏற்கனவே 2005ம் வருடம் ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கி வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகியுள்ளது.

முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டைய ராஜாவாகா அசத்தலாக நடித்துள்ளார். மேலும், சந்திரமுகியாக கங்கனா ரனாவத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

இன்று வெளியான இப்படத்தின் முதல் காட்சியை பலரும் பார்த்துவிட்டனர். அப்படி பார்த்துவிட்ட ரசிகர்கள் பலரும் படம் எப்படி இருக்கிறது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத்தின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

twit

‘முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கிறது. கங்கனா சிறப்பாக நடித்துள்ளார். லட்சுமி மேனனும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். வடிவேலு தனது நகைச்சுவை மூலம் சிரிக்க வைக்கிறார். வேட்டையனாக வரும் ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமேக்ஸ் தீயா இருக்கு’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த படம் முதல் பாகம் போலவே இருக்கிறது.. நிறைய காட்சிகளை கணிக்க முடிகிறது.. பாடல்கள் சுமாராகத்தான் இருக்கிறது. முதல் பாகத்தில் வந்த ராரா பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கலாம் அப்படி செய்திருந்தால் அது படத்தின் வெற்றிக்கு மேலும் உதவியிருக்கும். ஒரு ஹாரர் திரில்லர் படம் போல இருக்கிறது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

twit

‘இப்படத்தின் இறுதிக்காட்சி சிறப்பாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு என அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், குடும்பத்துடன் சென்று பார்க்க ஒரு ஜனரஞ்சகமான படம் இது எனவு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் டூ சந்தானம்… ஜி.வி. டூ துல்கர்… இந்த வார ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.