Cinema News
இந்தியன் 2 ஆடியோ விழாவில் நடந்த குளறுபடி!.. கூட்டத்தை கூட்ட இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா!..
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் படம் சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படம் உருவானபோதே இந்தியன் 3-வுக்குமான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படம் 4 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது.
ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டு ஒருவழியாக படம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், கமல், சிம்பு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், சித்தார்த் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடந்தால் இருக்கைகளை நிரப்ப கூட்டம் தேவைப்படும். இதற்காக கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவார்கள். இந்தியன் 2-வுக்கும் அப்படி சில கல்லூரிகளை அணுகி மாணவர்கள் வர சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கல்லூரி விடுமுறை என கடைசி நேரத்தில் தெரிந்துகொண்டு ‘ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்களையாவது அனுப்புங்கள்’ என கெஞ்சி கேட்டு வரவழைத்திருக்கிறார்கள்.
அதேபோல், எல்லோரையும் மாலை 5.30 மணிக்கே உள்ளே அனுமதித்து அமர வைத்துவிட்டார்கள். இரவு 1 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ஒரு சாப்பாடு, தண்ணீர், ஸ்னேக்ஸ் என எதுவுமே இல்லையாம். இதனால், பலரும் பசியால் அவதிப்பட்டிருக்கிறார்கள். பெரிய தலைகள் சொகுசு காரில் வீட்டுக்கு போய்விடுவார்கள். ஆனால், ரசிகர்கள் இரவு 1 மணிக்கு மேல் எப்படி போனார்கள் என்பது தெரியவில்லை.
மேலும், MIP (Most importatnt person) இடத்திற்கான எல்லா டிக்கெட்டுகளையும் கமலே வாங்கி கொண்டாராம். இதனால், முக்கியமான பலருக்கும் முன்னே அமர இருக்கை கிடைக்கவில்லை. இதன் காரணமாக பலரும் வரவில்லையாம். லோகேஷ் கனகராஜ், நெல்சன், சிம்பு, சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட இந்த விழா விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.