More
Categories: Cinema News latest news

எப்படி இருந்த லாஸ் இப்படி ஆயிட்டாங்க.. என்னாச்சு லாஸ்லியா..!!

ஸ்ரீலங்கா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான பெண்ணானார்.

பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாகியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

Advertising
Advertising

losliya

சமீபத்தில் வெளியான இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். ஹர்பஜன் சிங் இப்படத்தில் நடித்திருந்தாதால் இப்படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஒரு படமும் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

losliya

அந்தவகையில் தற்போது ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். அதில் உடல் எடை மிகவும் குறைத்து ஒல்லியாக காணப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் தனது தலை முடியையும் பாதியாக குறைத்துள்ளார். அந்தப் படத்தில் பார்ப்பதற்கே பாவமாக உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் என்னாச்சு லாஸ்லியா உங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
ராம் சுதன்

Recent Posts