Connect with us
msv

Cinema History

கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..

0களில் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். தமிழ் சினிமாவில் பல முக்கிய, அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளை எழுதி விட்டு சென்றவர் இவர்.

இவர் எழுதிய காதல் மற்றும் தத்துவ பாடல்கள் இன்னமும் காற்றில் ஒலித்துகொண்டிருக்கிறது. இப்போது குக்கிராமங்களில் ஒரு மரணம் நேர்ந்தால் இறுதி ஊர்வலத்தின் போது ‘வீடு வரை உறவு… வீதி வரை மனைவி’ பாடல் ஒலித்துகொண்டிருக்கிறது. அதுதான் கண்ணதாசனின் வெற்றி.

இதையும் படிங்க: ஒரே வருட இடைவெளியில் 2 முரண்பட்ட பாடல்கள்… கண்ணதாசன் இப்படி எழுத என்ன காரணம்?

இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் இசையில் பல அற்புதமான பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். எனவே, இருவரும் நல்ல நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இப்போது இருப்பது போல ‘இசை பெரிதா?.. பாடல் வரிகள் பெரிதா?’ என்கிற பஞ்சாயத்தெல்லாம் அவர்களுக்கு இடையே எப்போதும் இருந்தது இல்லை. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இரட்டையர் போல இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த, மதிக்கத்தக்க ஒரு கவிஞராக கண்ணதாசன் இருந்தார். ஒருமுறை கண்ணதாசனின் வீட்டில் இருந்து எம்.எஸ்.விக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. கவிஞர் இறந்துவிட்டார் என்பதுதான் செய்தி. உடனே, அழுதுகொண்டே அவரின் வீட்டுக்கு ஓடினார் எம்.எஸ்.வி. ஆனால், அங்கே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார் கண்ணதாசன். ‘ஒன்னுமில்லை விசு. நான் செத்துவிட்டேன் என கேள்விப்பட்டால் நீ என்ன செய்வாய்? எனக்காக அழுவாயா? என தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு இந்த நாடகத்தை நடத்தினேன் என சொன்னார் கண்ணதாசன்.

இதையும் படிங்க: கண்ணதாசன் வாங்கிய சத்தியம்!. எம்.ஜி.ஆர் அழைத்தும் போகாத வாலி!.. இது செம மேட்டரு!..

கண்ணதாசன் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது ‘என்னுடன் வா’ என எம்.எஸ்.வியை அழைத்தார். ஆனால், சில காரணங்களால் எம்.எஸ்.வி செல்லவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது ‘நான் அழைத்தும் விசு வரவில்லை’ என அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்ல, எம்.ஜி.ஆர் தொலைப்பேசியில் எம்.எஸ்.வியை தொடர்பு கொண்டு ‘நீ போனால் அவருக்கு ஆறுதலாக இருக்கும்’ என சொன்னார்.

ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக போகமுடியவில்லை என அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்ல ‘சரி அப்படியெனில் நீ டியூன் போடுவது போலவும். நீங்கள் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போலவும் ஒரு கேசட்டை தயார் செய்து அமெரிக்காவுக்கு அனுப்பு’ என சொல்ல எம்.எஸ்.வியும் அது போல ஒரு கேசட்டை உருவாக்கி அனுப்பினார். ஆனால், அந்த கேசட் அங்கு சென்று சேர்வதற்குள் கவிஞர் இறந்துவிட்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top