பனையூர் என்றாலே பஞ்சாயத்து தான் என்பது போல நேற்று இரவு நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியின் ஏற்பாடு கொஞ்சம் கூட சரியில்லை என்றும் பல ஆயிரக் கணக்கில் டிக்கெட்டு விற்க மட்டும் தெரிகிறது ஒழுங்கா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் தெரியவில்லை என ஏ.ஆர். ரஹ்மானை கழுவி ஊற்றி வருகின்றனர்.
25 ஆயிரம் ரூபாய் கொடுத்து கோல்டன் டிக்கெட் வாங்கிக் கொண்டு விஐபி வரிசையில் அமர்ந்தவர்களுக்கும் சரியான பாதுகாப்போ அல்லது மேடையை காணும் வியூவோ சரியாக ஏற்பாடு செய்யவில்லை என சினிமா பிரபலங்களே புலம்பும் அளவுக்கு நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க, வெளியே நடப்பதையும் தனது ரசிகர்கள் கஷ்டப்படுவது குறித்தும் கொஞ்சம் கூட கவலையில்லாமல் ஏ.ஆர். ரஹ்மான் பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்காரு என கடுமையான விமர்சனங்களை முன் வைத்து கண்டபடி திட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் சோலியை 4 நாளில் முடித்து விட்ட ஷாருக்கான்!.. குஷியில் விஜய் ரசிகர்கள்!.. ஜவான் வசூல் இதோ!
ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓப்பன் கிரவுண்ட் நிகழ்ச்சியின் போது மழை வந்து சொதப்பியது. இந்த முறை மழை வரவில்லை என்றாலும், அதிக கூட்ட நெரிசலை உருவாக்கி பல பெண்கள் மற்றும் குழந்தைகள் எல்லாம் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்ட சோக கதைகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொட்டித் தீர்ந்து வயிறு எரிந்து வரிகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் ஏற்பாடு செய்தார் என்றும் அதனால் தான் இப்படியொரு குளறுபடி என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் பொளந்துக் கட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: லோகேஷ் வேஸ்ட்!.. எல்லாமே எடிட்டர் மேஜிக்தான்!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே லியோ தயாரிப்பாளர்!..
இனி ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் இசைக்கச்சேரியே நடத்த மாட்டார் என்றும் உலகில் எங்கே இசைக் கச்சேரி நடத்தினாலும் வராத பிரச்சனைகள் சென்னையில் மட்டும் இப்படி வருகிறதே அவருக்கு என அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி கடைசியில் ரசிகர்களால் மறக்கவே முடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…